சினி செட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சினி செட்டி
அழகுப் போட்டி வாகையாளர்
2024 இல் செட்டி
பிறப்புசினி சதானந்த் செட்டி
மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா
கல்வி நிலையம்சோமையா வித்யாவிகார் பல்கலைக்கழகம்
பட்ட(ம்)ங்கள்
Major
competition(s)
  • பெமினா மிஸ் இந்தியா கர்நாடகா 2022
  • (வெற்றியாளர்)
  • பெமினா மிஸ் இந்தியா 2022
  • (வெற்றியாளர்)
  • மிஸ் வேர்ல்ட் 2023
  • (முதல் 8)

சினி சதானந்த் செட்டி (Sini Sadanand Shetty) என்பவர் ஒரு இந்திய வடிவழகி ஆவார். இவர் பெமினா மிஸ் இந்தியா அழகுப் போட்டியில் பட்டம் வென்றவர், மிஸ் வேர்ல்ட் 2023 இல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

வாழ்க்கை[தொகு]

சினி செட்டி மும்பையில் கர்நாடகாவைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தார். மும்பையில் காட்கோபரிலுள்ள புனித தோமினிக் சாவியோ வித்யாலயாவில் பயின்றார், தொடர்ந்து மும்பையில் உள்ள எஸ்.கே. சோமையா கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் பயின்றார், கணக்கியல் மற்றும் நிதியியல் துறையில் பட்டம் பெற்றார். இவர் ஒரு பயிற்சி பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞர். [1] [2] [3]

2022 ஆம் ஆண்டில், செட்டி பெமினா மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று வென்றார், டைம்சு மிஸ் பாடி பியூட்டிபுல் மற்றும் என்ஐஎஃப்டி மிஸ் டேலண்ட் துணை விருதுகளையும் வென்றார், இந்த நிகழ்வு மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் 3 சூலை 2022 அன்று நடந்தது.[சான்று தேவை] பெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் 2022 வெற்றியாளராக, செட்டி மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் 9 மார்ச் 2024 அன்று நடைபெற்ற உலக அழகி 2023 இல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். [4] [5] [6] [7] [8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Who is Sini Shetty, India's Miss World representative?". Deccan Herald. 12 June 2023.
  2. "Sini Shetty To Represent India At Miss World 2023: 5 Facts". ndtv.com.
  3. "Who Is Sini Shetty, 21 Year Old Miss India 2022 Representing India At Miss World 2023". india.com.
  4. "Meet Sini Shetty, Miss India 2022 who is all set to represent India in Miss World 2023". Daily News and Analysis.
  5. "Sini Shetty, Femina Miss India 2022 Winner, To Represent India In Miss World 2023". pragativadi.com. 11 June 2023.
  6. "Meet Sini Shetty, 21-Year-Old Miss India 2022 Who Will Represent India in Miss World 2024". news18.com. 11 June 2023.
  7. "India to host Miss World 2024 after 28 years. Sini Shetty to represent country". moneycontrol.com. 9 June 2023.
  8. "Miss India 2022 winner: Everything you wanted to know about Miss India World 2022 Sini Shetty". https://timesofindia.indiatimes.com/life-style/fashion/buzz/who-is-sini-shetty/articleshow/92646039.cms#:~:text=Sini's%20height%20is%205%20feet,weight%20is%2054%20kgs%20approx.. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சினி_செட்டி&oldid=3936974" இலிருந்து மீள்விக்கப்பட்டது