சித்ரா ராமகிருஷ்ணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்ரா ராமகிருஷ்ணா
பிறப்பு1963
தேசியம்இந்தியர்
கல்விB. Com, B.L.,FCS
பணிவணிக நிறைவேற்றுநர்
முன்னிருந்தவர்இரவி நரேன்

சித்ரா ராமகிருஷ்ணா (Chitra Ramakrishna) இந்திய தேசிய பங்கு சந்தையின் முதல் பெண் நிருவாக இயக்குனர் மற்றும் முதன்மை நிறைவேற்றுநர் ஆவார்.[1] இவருக்கு போர்ப்ஸ் நிறுவனத்தின் 2013ஆம் ஆண்டின் சிறந்த தலைவி என்ற விருது வழங்கப்பட்டது.[2]

ஆரம்பகாலப் பணி[தொகு]

ஒரு பட்டயக் கணக்காளராக தன் வாழ்க்கையைத் துவக்கிய சித்ரா, 1985-ல் இன்டஸ்ட்ரியல் டெவலப்மெண்ட் பாங்க் ஆஃப் இந்தியாவின் (IDBI-ஐடிபிஐ) திட்ட நிதிப் பிரிவில் இணைந்தாா். பின் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் பணியாற்றிவிட்டு இரு ஆண்டுகள் கழித்து ஐடிபிஐக்கு திரும்பினார்.இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் அதன் கருவூலத்திலும் நிரந்தர வருவாய்த்துறையிலும் பணியாற்றியாற்றிய போது பணம் தொடர்பான தனது அறிவை நன்கு பட்டை தீட்டினார். தேசிய பங்கு சந்தையின் நிருவாக இயக்குனராக 2009ஆம் ஆண்டும் முதன்மை நிறைவேற்றுநராக 2013ஆம் ஆண்டும் பணியில் இணைந்தார் [3]

ராமகிருஷ்ணா தனது அறிமுகமான தள்ளுபடி கடன் பத்திர ஒப்பந்தங்களை மிகச் செவ்வனே கையாண்டதற்காக IDBI-ன் நிறுவாக இயக்குனராக இருந்த மறைந்த முனைவர் ஆர்.எச். பாட்டீலின் பாராட்டைப் பெற்றார். இந்தப்பாராட்டு மேலும் சிறப்பாக பணியாற்ற வேண்டுமென தன்னை ஊக்கப்படுத்தியதாக சித்ரா கூறுகிறார். தேசிய பங்குச்சந்தையை உருவாக்கப்பட்ட சிறப்புக்குழுவில் இவரும் ஒருவராக இருந்தார். தேசிய பங்குச் சந்தை உருவாக்கப்படுவதற்கு முன்பிருந்தே இவர் பங்குச்சந்தை ஒழுங்குமுறை விதிகள், கொள்கை முடிவுகள் எடுக்கும் ஆணையங்களுடன் இணைந்து பணியாற்றினார். இந்திய பங்கு சந்தையை ஒழுங்கு படுத்தும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் அடிப்படை கட்டமைப்பை உருவாக்கும் குழுவிலும் இணைந்து பணியாற்றியதோடு பின்பு அதன் பல கொள்கை முடிவெடுக்கும் ஆணையங்களில் பணியாற்றினார்..[2]

2016ஆம் ஆண்டு பதவி விலகும் போது பணச் சேவை துறையில் அதிக மாதச்சம்பளம் பெறுபவர்களில் இவர் இரண்டாம் இடத்தில் இருந்தார். முதல் இடத்தில் ஆண்டுக்கு 9.7 கோடி சம்பளம் பெறும் எச்டிஎஃசி வங்கியின் நிருவாக மேலாளர் ஆதித்தியா புரி இருந்தார். அச்சமயத்தில் ஆண்டுக்கு 3.3 கோடி பெற்ற மும்பை பங்குச் சந்தையின் தலைமை செயல் அதிகாரி ஆசிசுகுமார் சௌகானை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு பெறுபவராக இருந்தார் [4] [5]

முறைகேடு[தொகு]

பிப்ரவரி 2022ஆம் ஆண்டு இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) 20 ஆண்டுகளாக இவர் அடையாளம் தெரியாத இமயமலை யோகி ஒருவரின் அறிவுரைப்படி முக்கிய முடிவுகளை தேசிய பங்குச்சந்தையில் எடுத்துள்ளதாக கூறியுள்ளது. மின்னஞ்சல் மூலம் அவரின் ஆணைகளை பின்பற்றும் இவர் அவருடன் சீசெல்சு நாட்டுக்கு சென்று களியாட்டம் போட திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது, இவர் பல அன்றாட நடவடிக்கைகளை மின்னஞ்சலில் அவருக்கு கசியவிட்டுள்ளார். எர்னசட் & யங் என்ற நிறுவனம் நடத்திய தணிக்கையால் முறைகேடு 2015ஆம் ஆண்டு வெளிவந்தது[6] முறைகேட்டை அறிந்தும் எந்த விசாரணையும் இல்லாமல் அவரை பதவி விலக தேசிய பங்கு சந்தை இயக்குநர் குழு அனுமதித்தது என செபி கூறியது. எர்னசட் & யங் தடவியல் சோதனை மூலம் ஆனந்த் சுப்பரமணியன் தான் இமயமலை யோகி என்று கூறியுள்ளது. தேசிய பங்கு சந்தையும் 2018 ஆம் ஆண்டு ஆனந்த் சுப்பரமணியன் தான் இமயமலை யோகி என்று கூறியுள்ளது.[7] சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 3 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ள செபி, இனி வரும் 3 ஆண்டுகளுக்கு பங்கு சந்தை தொடர்பான நடவடிக்கைகளில் அவர் ஈடுபடக் கூடாது எனவும், செபியிடம் பதிவு செய்துள்ள நிறுவனத்தில் இடைத்தரகராக பணிபுரிய கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. [8] தேசிய பங்குச்சந்தை இயக்குநர்கள் குழு இவரின் செயலில் தவறை\முறைகேட்டை அறிந்திருந்த போதிலும் இவர் செயலை பெரிதும் பாராட்டி பதவி விலக அனுமதித்துள்ளது [9]

குறிப்புகள்[தொகு]

  1. "NSE". 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-01-19 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 "Forbes India".
  3. https://www.ndtv.com/india-news/a-yogi-ran-indias-top-stock-exchange-as-puppet-master-regulator-2766194
  4. https://www.zee5.com/articles/here-is-all-you-need-to-know-about-chitra-ramkrishna
  5. https://www.business-standard.com/about/who-is-chitra-ramkrishna#collapse
  6. https://in.mashable.com/business-1/27609/the-bizarre-story-of-the-imaginary-monk-who-duped-the-nse-ceo-drew-a-salary-of-138-crore-and-more?fbclid=IwAR3eMnMp_kNN9Wy1rvZnEQwcVF74TDEPDg3FTFa8Nx2l8V8Z3HrE7I_GRKU
  7. https://theprint.in/economy/incredible-story-of-how-a-faceless-yogi-conned-nse-ceo-got-9x-salary-3-day-week-promotions/832055/
  8. https://www.bbc.com/tamil/india-60372398
  9. https://indianexpress.com/article/india/board-knew-of-nse-chiefs-misconduct-let-her-resign-praise-7781803/?fbclid=IwAR1POjE2np57ZtmYyDfQrHykFIFrUpergSxvn5wcoBFNWt4yE1p3wSRq5Tg
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்ரா_ராமகிருஷ்ணா&oldid=3728219" இருந்து மீள்விக்கப்பட்டது