சித்தாந்தப் பிரகாசிகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சித்தாந்தப் பிரகாசிகை எனும் நூல் சைவ சித்தாந்தக் கருத்துக்களை எளிய முறையில் கூறும் நூலாகும். இந்நூல் சித்தாந்த அடிப்படைப் பொருள்களை எல்லாம் கூறுகின்றது.

நூலமைப்பு[தொகு]

இந்நூலை இயற்றியவர் சிவஞான முனிவர் ஆவார். வடமொழியில் சர்வாத்ம சம்பு சிவாசாரியாரால் எழுதப்பட்ட சித்தாந்தப் பிரகாசிகை என்ற நூலின் மொழிபெயர்ப்பாக உரைநடைச் செய்யுள் அமைப்பில் சிவஞான முனிவர் எழுதியுள்ளார். இந்நூல் ஏழு பிரகரணங்களாகப் பிரிக்கப்பட்டு அமைந்துள்ளது. மூன்று காண்டங்களில் முப்பத்தாறு தத்துவங்களை விளக்குகிறது இந்நூல்.

நூல் கருத்துகள்[தொகு]

  • முதலாவது உள்ள போக்கிய காண்டத்தில் 24 ஆன்ம தத்துவங்களுடன் மாயைத் தத்துவமும் விளக்கப்பட்டுள்ளது.
  • இரண்டாவது அமைந்த தத்துவப் பிரகரணத்தில் மூன்று காண்டங்களும் விளக்கப்பட்டுள்ளன.
  • போகசமாத்துரு, காண்டத்தில் ஆறு வித்தியாதத்துவங்கள் விளக்கப்பட்டுள்ளன.
  • பிரேர காண்டத்துள் சுத்த வித்தை,ஈசுவர தத்துவம், சதாசிவத் தத்துவம்,சக்தி தத்துவம், சிவ தத்துவம் ஆகியன விளக்கப்பட்டுள்ளன.
  • முதல் பிரகரணம், தேகப் பிரகரணம் என உயிர்களின் தூல,சூக்கும தேகங்களை விளக்குகின்றது..

உசாத்துணை[தொகு]

1) மாதவச் சிவஞான யோகிகள் அருளிச் செய்த பிரபந்தத்த் திரட்டு,பாகம்-1,2- கழக வெளியீடு 1929. 2) வே.செல்லத்தாள்,' சிவஞான முனிவர்'- விஜயா பதிப்பகம் கோவை-2016.