சித்தர்களின் உடற்கூற்றியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உடற்கூற்றியல் என்பது மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உடல் உறுப்புகளின் கட்டமைப்புகளைப் பற்றி விரிவாக விளக்கிடும் அறிவியல் துறை. இந்தத் துறை இரண்டு பெரும் பிரிவுகளாய் வகைப்படுத்தப் பட்டிருக்கிறது. வெறும் கண்களால் பார்த்து உணரக் கூடிய உறுப்புகளின் கட்டமைப்பை ஆராய்ந்து அறியும் வகையினை “மாக்ராஸ்கோப்பிக் அனாடமி” என்றும், கண்களால் பார்க்க முடியாத அல்லது நுண்ணோக்கிகளின் வழியே மட்டும் ஆராய்ந்து அறியும் வகையினை “மைக்ராஸ்கோப்பிக் அனாடமி” என்றும் அழைக்கின்றனர்.

திருமூலர்[தொகு]

மனித உடலானது தொண்ணூற்றி ஆறு பொறிகளால் கட்டப் பட்டது அது பற்றி திருமூலர் பின்வருமாறு உரைக்கிறார்.

"பூதங்கள் ஐந்தும் பொறியவை ஐந்துளும்

ஏதம் படஞ்செய்து இருந்து புறநிலை

ஓதும் மலம்குணம் ஆகும்ஆ தாரமொடு

ஆதி அவத்தைக் கருவிதொண் ணூற்றாறே" - திருமூலர்

சித்தர்கள் இராச்சியம் இங்கிருந்து சுட்டியது..

வகைகள்[தொகு]

இந்த தொண்ணூற்றி ஆறு பொறிகளை அறிந்து, தெளிந்து கொள்வதே சித்த மருத்துவத்தின் அடிப்படையாகிறது. இவை ஒவ்வொன்றின் இயல்பு, குணம், தொழிற்பாடு போன்றவைகளை உணர்ந்து கொண்டுவிட்டால், சித்த மருத்துவத்தின் மகிமைகளைப் புரிந்து கொள்ளமுடியும். அதனை வெற்றிகரமாய் பயன்படுத்திடவும் முடியும். இந்த தொண்ணூற்றி ஆறு பொறிகளையும் இருபது வகைகளாய் பிரித்துக் கூறியிருக்கின்றனர்.

இருபது வகைகள்[தொகு]

 1. அறிவு
 2. இருவினை
 3. மூவாசை
 4. அந்தகரணங்கள்
 5. பஞ்சபூதங்கள்
 6. பஞ்சஞானேந்திரியங்கள்
 7. பஞ்சகன்மேந்திரியஙக்ள்
 8. ஐந்து உணர்வுகள் (பஞ்சதன்மாத்திரைகள்)
 9. பஞ்சகோசங்கள்
 10. மூன்று மண்டலஙக்ள்
 11. குணங்கள்
 12. மலங்கள்
 13. பிணிகள்
 14. ஏடனை
 15. ஆதாரங்கள்
 16. அவஸ்தைகள்
 17. தாதுக்கள்
 18. ராகங்கள்
 19. தச நாடிகள்
 20. தசவாயுக்கள்

இந்த இருபது வகைகளில் தொண்ணூற்றி ஆறு பொறிகளும் அடங்கி இருக்கிறது. இவையே நம் உடலை இயக்குகின்றன. இவற்றில் ஏதேனும் ஒன்றில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் கூட அது உடலுக்கு சுகவீனம் ஏற்பட காரணமாய் அமைந்து விடுகிறது.

தொண்ணூற்றி ஆறு கூறுகள்[தொகு]

ஆதாரங்கள்(6) மற்றும் துரியம்
 1. அறிவு
 2. இருவினை(2)
  1. நல்வினை
  2. தீவினை
 3. மூவாசைகள் (3)
  1. மண்
  2. பொன்
  3. பெண்
 4. மூன்று மண்டலங்கள்(3)
  1. அக்னி மண்டலம்
  2. சூரிய மண்டலம்
  3. சந்திர மண்டலம்
 5. குணங்கள்(3)
  1. ராஜஸம்
  2. தாமசம்
  3. ஸாத்வீகம்
 6. மலங்கள்(3)
  1. ஆணவம்
  2. கன்மம்
  3. மாயை
 7. பிணிகள்(3)
  1. வாதம்
  2. பித்தம்
  3. சிலேத்துமம்
 8. ஏடனை(3)
  1. லோக ஏடனை
  2. அர்த்த ஏடனை
  3. புத்திர எடனை
 9. அந்தக் கரணங்கள் (4)
  1. மனம்
  2. புத்தி
  3. சித்தம்
  4. அகங்காரம்
 10. பஞ்சபூதங்கள்(5)
  1. பிருதிவி - (பூமி - நிலம் - மண்)
  2. அப்பு - (ஜலம் - நீர் - புனல்)
  3. தேயு - (அக்னி - நெருப்பு - அனல்)
  4. வாயு - (கால் - காற்று - கனல்)
  5. ஆகாயம் ( வெளி - வானம் - விசும்பு)
 11. பஞ்ச ஞானேந்திரியங்கள்(5)
  1. மெய்
  2. வாய்
  3. கண்
  4. மூக்கு
  5. செவி
 12. பஞ்ச கன்மேந்திரியங்கள்(5)
  1. வாக்கு (வாய்)
  2. பாணி (கை)
  3. பாதம் (கால்)
  4. பாயுரு (மலவாய்)
  5. உபஸ்தம்(கருவாய்)
 13. ஐந்து உணர்வுகள் (பஞ்ச தன் மாத்திரைகள்)(5)
  1. சுவை (ரசம்)
  2. ஒளி (ரூபம்)
  3. ஊறு (ஸ்பரிசம்)
  4. ஓசை (சப்தம்)
  5. நாற்றம் (கந்தம்)
 14. பஞ்ச கோசங்கள்(5)
  1. அன்னமய கோசம்
  2. பிராணமய கோசம்
  3. மனோமய கோசம்
  4. விஞ்ஞானமய கோசம்
  5. ஆனந்தமய கோசம்
 15. அவஸ்தைகள்(5)
  1. சாக்கிரம் (நனவு)
  2. சொப்பனம் ( கனவு)
  3. சுழுத்தி (உறக்கம்)
  4. துரியம் ( நிஷ்டை)
  5. துரியாதீதம் (உயிர்ப்படக்கம்)
 16. ஆதாரங்கள்(6)
  1. மூலாதாரம்
  2. சுவாதிஷ்டானம்
  3. மணிபூரகம்
  4. அனாகதம்
  5. விசுத்தி
  6. ஆஞ்ஞா
 17. தாதுக்கள்(7)
  1. இரசம்
  2. இரத்தம்
  3. மாமிசம்
  4. மேதஸ்
  5. அஸ்தி
  6. மச்சை
  7. சுக்கிலம் அல்லது சுரோணிதம்
 18. ராகங்கள்(8)
  1. காமம்
  2. குரோதம்
  3. லோபம்
  4. மோகம்
  5. மதம்
  6. மாச்சரியம்
  7. இடம்பம்
  8. அகங்காரம்
 19. தச நாடிகள்(10)
  1. இடைகலை - (இடப்பக்க நரம்பு)
  2. பிங்கலை - (வலப்பக்க நரம்பு)
  3. சுமுழுனை - (நடுநரம்பு)
  4. சிகுவை - (உள்நாக்கு நரம்பு)
  5. புருடன் - (வலக்கண் நரம்பு)
  6. காந்தாரி - (இடக்கண் நரம்பு)
  7. அத்தி - ( வலச்செவி நரம்பு)
  8. அலம்புடை - (இடச்செவி நரம்பு)
  9. சங்கினி - (கருவாய் நரம்பு)
  10. குகு - (மலவாய் நரம்பு)
 20. தசவாயுக்கள்(10)
  1. பிராணன் - உயிர்க்காற்று
  2. அபாணன் - மலக் காற்று
  3. வியானன் - தொழிற்காற்று
  4. உதானன் - ஒலிக்காற்று
  5. சமானன் - நிரவுக்காற்று
  6. நாகன் - விழிக்காற்று
  7. கூர்மன் - இமைக்காற்று
  8. கிருகரன் - தும்மற் காற்று
  9. தேவதத்தன் - கொட்டாவிக் காற்று
  10. தனஞ்செயன் - வீங்கல் காற்று

ஆக மொத்தம் தொண்ணூற்றாறு கூறுகளைக் கொண்டது நமது உடல். சித்த மருத்துவர்கள் உடற்கூறியல் முறைகளின் படியே நோய்களை அணுகுகின்றனர்.

தெளிவு[தொகு]

உடற்கூற்றியலில் சித்தர் பெருமக்கள் முன் வைக்கும் முதல் ஆச்சர்யமான தெளிவு, எந்த ஒரு மனிதனின் உடம்பும் அவரது கையால் அளக்க எட்டு சாண் உயரமும், நான்கு சாண் பருமனும், தொன்னூற்றி ஆறு விரற்கடை பிரமாணமும் கொண்டதாக இருக்குமாம்.இது வேறெந்த மருத்துவ முறையின் உடற்கூற்றியலும் சொல்லாத ஒரு செய்தி.

மூலம்[தொகு]