சித்தர்களின் அண்டவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறும்பர்களிடம் இருந்து தப்பி காட்டிற்குள் புகுந்த பண்டைகால காஞ்சியின் மன்னர் தொண்டைமான் இளந்திரையன், ரோமசர் என்ற சித்தரிடமிருந்து அண்டவியல் உபதேசம் பெற்றதாக ரோமசர் பற்றிய நூல்கள் கூறுகின்றன.[1]

உபதேச சுருக்கம்[தொகு]

இந்த உபதேசத்தில் அவர் பூமியின் வயது, சூர்ய குடும்ப தோற்ற மறைவு, அண்டத்தின் வயது ஆயுள், அண்டவியல் அலகுகள் போன்றவற்றை குறிப்பிடுகிறார். மேலும் ஒவ்வொரு பிரம்மா இறக்கும் போதும் தன் உடலில் இருந்து ஒரு முடி உதிர்வதாகவும், தற்போது அவர் 71 பிரம்மாக்களை பார்த்துள்ளதால் 71 முடிகள் உதிர்ந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

பூமியின் வயது[தொகு]

  • பூமியின் வயதை கணக்கிட 432ஐ 10 லட்சத்தால் பெருக்க வேண்டும் என்கிறார். அதாவது பூமியின் வயது 432 கோடியே 10 லட்சம் ஆண்டுகள் என்கிறார்.

விஞ்ஞானம்

  • இன்றைய விஞ்ஞானம் பூமியின் வயது 450 கோடி ஆண்டுகள் என கணிக்கிறது.[2]

சூர்ய குடும்ப ஆயுள்[தொகு]

  • பிரம்மாவின் ஒரு நாளே சூர்ய குடும்ப ஆயுள் என்கிறார். அதாவது சூர்ய குடும்ப ஆயுள் 864 கோடி ஆண்டுகள் என்கிறார். பிரம்மாவின் ஒரு நாள் முடியும் போது 14 லோகங்களில் பூலோகம், புவர் லோகம், சுவர் லோகம் மட்டுமே அழியும் என்றும், மற்ற 11 லோகங்கள் ஒவ்வொரு பிரம்மா இறக்கும் போது அழியும் என்கிறார்.

விஞ்ஞானம்

  • இன்றைய விஞ்ஞானம் சூர்ய குடும்ப ஆயுள் 900 கோடி ஆண்டுகள் என கணிக்கிறது.[3][4]

அண்டம்[தொகு]

விஞ்ஞானம்

  1. இன்றைய விஞ்ஞானம் அண்டத்தின் வயது 1300 கோடி ஆண்டுகளுக்கு மேல் என கணிக்கிறது.[5][6]

அகிலாண்டம்[தொகு]

  • சூரபதுமன் (கந்த புராணம்) என்ற அவுன தேச அரக்கன், 1008 அண்டங்களை ஆளும் வரத்தை சிவனிடமிருந்து பெற்றதாக கூறுகிறார்.

விஞ்ஞானம்

  • இன்றைய விஞ்ஞானம் இதை போன்ற பல்லண்டங்களை மல்டிவெர்சு (multiverse) என கூறுகிறது.[7]

மேற்கோள்[தொகு]

  1. சித்தர்கள் வாழ்க்கை, பரசுராமன், விகடன் பிரசுரம், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8189936068.
  2. வான சாஸ்திரம், வேங்கடம், விகடன் பிரசுரம் பக்கம் - 129, பூமியின் வயது, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8189936228
  3. வான சாஸ்திரம், வேங்கடம், விகடன் பிரசுரம்பக்கம் - 95, சூரியனின் கடைசி காலங்கள், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8189936228
  4. Zirker, Jack B. (2002). Journey from the Center of the Sun. Princeton University Press. பக். 7–8. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780691057811. https://archive.org/details/journeyfromcente0000zirk_f4e3. 
  5. Short scale usage, i.e., 13.75 thousand million.
  6. "Seven-Year Wilson Microwave Anisotropy Probe (WMAP) Observations: Sky Maps, Systematic Errors, and Basic Results" (PDF). nasa.gov. Archived from the original (PDF) on 2012-08-16. பார்க்கப்பட்ட நாள் 2011-02-01. (see p. 39 for a table of best estimates for various cosmological parameters)
  7. http://en.wikipedia.org/wiki/Multiverse

உசாத்துணை[தொகு]

  1. சித்தர்கள் வாழ்க்கை, பரசுராமன், விகடன் பிரசுரம், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8189936068. ரோமசர் பற்றிய தகவல்களுக்கு
  2. வான சாஸ்திரம், வேங்கடம், விகடன் பிரசுரம் பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8189936228. விஞ்ஞான குறிப்புகளுக்கு

குறிப்பு - ரோமசரின் முழு வரலாறு கூறும் மற்ற புத்தகங்களிலும் இந்த அண்டவியல் உபதேசம் பற்றிய குறிப்புகள் இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தர்களின்_அண்டவியல்&oldid=3622613" இலிருந்து மீள்விக்கப்பட்டது