சித்தம் நர்சி ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சித்தம் நர்சி ரெட்டி (Chittem Narsi Reddy) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இவர் சுதந்திரப் போராட்ட வீரராகவும் அறியப்படுகிறார். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும், இரண்டு முறை மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். சனதா தளம் கட்சியின் சார்பாக 1985, 1989 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் மக்தல் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]

இளமைப் பருவம்[தொகு]

நாராயணப்பேட்டை மாவட்டம் தன்வாடாவில் சித்தம் நர்சிரெட்டி பிறந்தார். அதன் பிறகு மக்தலில் குடியேறினார். இவரது தந்தையின் பெயர் ராம் ரெட்டி என்பதாகும். மெட்ரிகுலேசன் வரை தன்வாடா, நாராயணப்பேட்டை அரசுப் பள்ளிகளில் படித்தார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

1978 ஆம் ஆண்டில் சனதா கட்சி சார்பில் நர்சிரெட்டி போட்டியிட்டு இந்திரா காங்கிரசு கட்சியின் வேட்பாளரான நரசிம்மு நாயுடுவிடம் தோல்வியடைந்தார். அதன்பிறகு 1985 ஆம் ஆண்டில் சனதா கட்சி சார்பில் போட்டியிட்டு காங்கிரசு வேட்பாளர் நரசிம்மு நாயுடுவை தோற்கடித்து முதல் முறையாக சட்டசபைக்குள் நுழைந்தார்.1989 ஆம் ஆண்டில் சனதா தளம் சார்பில் போட்டியிட்டு காங்கிரசு வேட்பாளர் நரசிம்மு நாயுடுவை தோற்கடித்தார். அதன் பிறகு காங்கிரசு கட்சியில் இணைந்தார். 1999 ஆம் ஆண்டில் காங்கிரசு சார்பில் போட்டியிட்டு தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் எல்கோட்டி எல்லாரெட்டியிடம் தோல்வியடைந்தார். 2004 ஆம் ஆண்டில் காங்கிரசு கட்சி சார்பில் போட்டியிட்டு பாரதிய சனதா வேட்பாளர் நாகுராவ் நமாச்சியை தோற்கடித்தார்.

இறப்பு[தொகு]

2015 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 அன்று, நாராயணப்பேட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவிட்டு, வளர்ச்சித் திட்டத்தில் பங்கேற்பதற்காக உள்ளூர் எஸ்சிவாடாவுக்குச் சென்ற நர்சிரெட்டி, நக்சலைட்டுகளின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தம்_நர்சி_ரெட்டி&oldid=3813385" இலிருந்து மீள்விக்கப்பட்டது