சிட்டிசன் கேன்
சிட்டிசன் கேன் | |
---|---|
இயக்கம் | ஓர்சன் வெல்ஸ் |
தயாரிப்பு | ஓர்சன் வெல்ஸ் |
கதை | ஓர்சன் வெல்ஸ், ஹெர்மேன் ஜே.மன்கிவிக்ஸ் |
நடிப்பு | ஜோசப் கோட்டன், டோர்த்தி கொமிங்கோர், ரூத் வாரிக், எவெரெட் ஸ்லோன், ஜோர்ஜ் கௌலரிஸ், ரே கோலின்ஸ், அக்னெஸ் மூர்ஹெட், ஓர்சன் வெல்ஸ் |
விநியோகம் | RKO ரேடியோ பிக்சர்ஸ் |
வெளியீடு | மே 1, 1941 |
ஓட்டம் | 119 நிமிடங்கள். |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $686,033 அமெரிக்க டாலர்கள் |
சிட்டிசன் கேன் (Citizen kane) 1941 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.ஓர்சன் வெல்ஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜோசப் கோட்டன் டோர்த்தி கோமிங்கோர் போன்ற பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.[1][2][3]
வகை
[தொகு]கதை
[தொகு]கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
சார்ள்ஸ் ஃபோஸ்ட்டெர் கேன் ஒரு வியாபாரியின் மகனாவார் தனது சிறு வயதுமுதல் செல்வந்தராக இருக்கும் இவர் தனக்கென்ற ஒரு அரசியல் கட்சியை ஏற்படுத்திக்கொள்கின்றார்.பின்னர் அவ்வரசியலில் இருந்து படிப்படியே உயர்ந்து செல்லும் இவர் தனது காதலியைக் கண்டுகொள்ளாதுமிருக்கின்றார்.பணமே மிக முக்கியமானதாகக் கருதும் இவர் இறுதியில் தனது மிகப்பெரிய அரண்மனையின் தோற்றம் கொண்ட வீட்டில் தனியே இருக்கின்றார்.யாரின் உதவியுமின்றி தனியே இறந்தும் போகின்றார்.இவரின் வாழ்க்கையினை ஆரம்பத்தில் தெரிந்துகொள்ள முடியாத பத்திரிகையாளர் ஒருவர் அவரைப் பற்றிய தகவல்களை திரட்டிவருகின்றார்.இவரைப்பற்றி பலரும் பல கருத்துக்களைத்தெரிவிக்கும் பொழுது ரோஸ்பட் என்னும் பெயர் அடிபடுகின்றது அதென்ன ரோஸ்பட் என்ற ஆராய்வில் ஈடுபடுகின்றார் அப்பதிரிகையாளரும்.அச்சமயம் அவர் இறந்து போகும் பொழுது ரோஸ்பட் என்ற பெயரைக் கொண்ட பொருளை அவர் வாழ்ந்த மனையிலிருந்து கண்டெடுக்கின்றனர்.இதனைப் பற்றி பல விடயங்கள் ஆராய்ந்தும் அவர்களுக்கு அர்த்தம் தெரியவில்லை.அதே சமயம் அவர் இறக்கும் சமயமும் அந்த ரோஸ்பட் பெயரை உச்சரித்துவிட்டே இறக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.அதன் பின்னர் அப்பெயரானது அவர் சிறுவயதில் உள்ளபோது அவர்வைத்துவிளையாடிய பனிச்சறுக்கு விளையாட்டுப்பொருளாகும், அச்சிறுவாழ்க்கையினை அவர் இறக்கும் பொழுது விரும்பியிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விருதுகள்
[தொகு]ஆஸ்கார் விருது
[தொகு]வென்ற விருது:
- சிறந்த திரைக்கதை - ஓர்சன் வெல்ஸ் மற்றும் ஹெர்மேன் ஜே.மன்கிவிக்ஸ்
பரிந்துரைக்கப்பட்ட விருது:
- சிறந்த திரைப்படம்
- சிறந்த இயக்குநர்
- சிறந்த நடிகர் - ஓர்சன் வெல்ஸ்
- சிறந்த படத்தொகுப்பு - ரோபேர்ட் வைஸ்
- சிறந்த கலை இயக்குநர் - பெரி ஃபெர்கசன், ஏ.ரோலாண்ட் ஃபீல்ட்ஸ், வான் நெஸ்ட் போல்க்லேஸ், டாரெல் சிவெரா
- சிறந்த ஒளிப்பதிவு(கறுப்பு வெள்ளைப்படம்) - கிரெக் டொலாண்ட்
- சிறந்த ஒலியமைப்பு - ஜோன் ஆல்பேர்க்
- சிறந்த இசையமைப்பு - பெர்னாட் ஹெர்மன்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Citizen Kane (A)". British Board of Film Classification. August 1, 1941. Archived from the original on March 6, 2016. பார்க்கப்பட்ட நாள் December 23, 2015.
- ↑ Carringer, Robert L. (October 24, 1996). The Making of Citizen Kane, Revised Edition. University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780520205673. Archived from the original on November 14, 2020. பார்க்கப்பட்ட நாள் May 3, 2020 – via Google Books.
- ↑ "Citizen Kane (1941)". Box Office Mojo. Archived from the original on September 2, 2017. பார்க்கப்பட்ட நாள் January 16, 2017.