உள்ளடக்கத்துக்குச் செல்

சிங்கப்பூர் தேசிய மருத்துவமனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிங்கப்பூர் பொது மருத்துவமனை
சிங்கெல்த்
சிங்கப்பூர் பொது மருத்துமனையின் வளாகம் நான்கிற்கான நுழைவாயில்
அமைவிடம் ஔட்ரம் பூங்கா, சிங்கப்பூர்
வகை கல்வி
அவசரப் பிரிவு நிலை I
படுக்கைகள் 1700
நிறுவல் 1821
வலைத்தளம் சிங்கப்பூர் பொது மருத்துவமனை
பட்டியல்கள்
சிங்கை பொது மருத்துவமனையின் போயர் வளாகம் மே 2005 இலிருந்து மருத்துவமனை அருங்காட்சியகமாக விளங்குகின்றது.

சிங்கப்பூர் பொது மருத்துவமனை (Singapore General Hospital, சுருக்கம்: SGH; எளிய சீனம்: 新加坡中央医院பின்யின்: Xīnjiāpō Zhōngyāng Yīyuàn; மலாய்: Hospital Besar Singapura) சிங்கப்பூரின் மிகப்பெரியதும் பழமையானதுமான அரசு மருத்துவமனை ஆகும்.[1] இந்த மருத்துவமனைக்கான முதற் கட்டிடத்திற்கு 1821 இல் அடிக்கல் நாட்டப்பட்டது.[2]

இந்த மருத்துவமனையில் சிங்கப்பூரின் தந்தை எனப்படும் லீ குவான் யூ நுரையீரல் அழற்சிக்குச் சிகிச்சை பெற்றுவந்தார். 2015 ஆம் ஆண்டில் தன் 91 ஆம் வயதில் இந்த மருத்துவமனையில் அவர் மரணமடைந்தார்.

ஔட்ரம் பூங்காப் பகுதியில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை சிங்கப்பூர் சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றது. இங்கு சிங்கப்பூர் நாட்டுக் கண் மருத்துவ மையம், (SNEC), இதய மையம் (NHC), புற்றுநோய் மையம் (NCC) பல் மருத்துவ மையம் (NDC) உள்ளிட்ட ஐந்து சிறப்பு மருத்துவ மையங்கள் உள்ளன.

சான்றுகள்

[தொகு]