சிக்தா நீர்ப்பாசனத் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கட்டுமானத்தின் போது சிக்தா நீர்ப்பாசனத் திட்டம்

சிக்தா நீர்ப்பாசனத் திட்டம் (Sikta Irrigation Project) நேபாள நாட்டில் உருவாக்கப்பட்ட தேசத்திற்கு பெருமை சேர்க்கும் திட்டங்களில் ஒன்றாகும். [1] மேற்கு நேபாளத்தில் உள்ள ராப்தி ஆற்றில் இருந்து இத்திட்டத்திற்கான தண்ணிர் உட்கொள்ளப்படுகிறது. ஒவ்வொன்றும் 50 மீ3/நொடி கொள்ளளவு கொண்ட இரண்டு கால்வாய்கள் இதற்காக உள்ளன. கால்வாயின் நீளம் மேற்குப் பகுதியில் 45.25 கிலோமீட்டராகவும், கிழக்குப் பகுதியில் 53 கிலோமீட்டராகவும் உள்ளது. கால்வாய்கள் ஒவ்வொன்றும் 3 கட்டங்களாக அமைக்கப்பட்டுள்ளன. [2] 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, திட்டத்தின் 60% வரை நிறைவடைந்துள்ளது.

திட்ட வளர்ச்சி[தொகு]

திட்டத்தின் சாத்தியக்கூறு ஆய்வு 1980 ஆம் ஆண்டில் செருமனியைச் சேர்ந்த ஒரு பொறியியல் நிறுவனத்தால் செய்யப்பட்டது. 1983 ஆம் ஆண்டில், நீரியல் மற்றும் அளவியல் துறை ஆய்வைத் திருத்தியது. 2004 ஆம் ஆண்டில், ஐரோப்பிய ஒன்றியத்தின் கீழ் நீர்ப்பாசன மேம்பாட்டுத் திட்டம், சாத்தியமானது என்று முடிவு செய்தது. அரசாங்கம் தனது சொந்த வளங்களைக் கொண்டு திட்டத்தைத் தொடங்க இது வழிவகுத்தது.

2005-06 ஆம் ஆண்டில் ஆரம்ப திட்டச் செலவு நேபாள ரூபாய் 12.8 பில்லியனாக இருந்தது. 2014-15 ஆம் ஆண்டில் திட்டம் நிறைவடையும் என மதிப்பிடப்பட்டது. ஆனால் இந்த திட்டம் 2020 ஆம் ஆண்டில் கூட கட்டுமானத்தில் இருந்தது. திட்ட மதிப்பும் 25.02 பில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. [3] 2019 ஆம் ஆண்டில், திட்டத்தின் நிறைவு 60% அளவாக இருந்தது. [4]

கட்டுமானத்திற்கான ஒப்பந்ததாரர் சிடிசி கலிகா என்ற இணை கூட்டு நிறுவனமாகும். பாங்கே மாவட்டத்தில் 42,000 எக்டேர் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய திட்டம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

சேதங்கள் மற்றும் விபத்துக்கள்[தொகு]

  • 2016 இல், 5 மீ 3/வி ஓட்டத்தின் சோதனையின் போது பலவீனமான மண்ணின் தன்மை காரணமாக கால்வாய் பகுதி இடிந்து விழுந்தது. [3] [5] [6]
  • செப்டம்பர் 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் கால்வாயின் பல பகுதிகளில் சேதங்கள் பதிவாகியுள்ளன. கால்வாயில் குறுக்கு வடிகால் பிரச்னையால் பாதிப்பு ஏற்பட்டது. பெரும்பாலான சேதங்கள் வடிகுழாய் பகுதிகளுக்கு அருகில் காணப்பட்டன. [7]
  • 2018 ஆம் ஆண்டின் போதும் , சோதனையின் போது கால்வாயில் சேதங்கள் பதிவாகியுள்ளன. [3]

ஊழல்[தொகு]

இந்த திட்டத்தில் நேபாள ரூபாய் அளவில் 2 பில்லியனுக்கும் அதிகமான ஊழல் நடைபெற்றதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கால்வாய் கட்டும் பணி தொடர்பாக முன்னாள் அமைச்சரும், காளிகா கட்டுமான நிறுவனத்தின் தலைவருமான பிக்ரம் பாண்டே மற்றும் 20 ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிக்ரம் பாண்டேவிடம் இருந்து ரூ 2.13 பில்லியனையும், திலீப் பகதூர் கார்க்கியிடம் இருந்து 1.56 பில்லியனையும், சரோச்சு சந்திர பண்டிட்டிடமிருந்து 593.45 மில்லியனையும் விசாரணைக் குழு கோரியுள்ளது. ஆலோசனை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான உத்தவ் ராசு சௌலகாயிடம் இருந்தும் ரூ.24.05 மில்லியனை இக்குழு கோருகிறது. [8] [9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "National Planning Commission". Archived from the original on 2020-09-03. பார்க்கப்பட்ட நாள் 2022-05-24.
  2. "The Rising Nepal: Sikta Irrigation Project to come into operation by June". Archived from the original on 2020-06-13. பார்க்கப்பட்ட நாள் 2020-06-13.
  3. 3.0 3.1 3.2 "Probe questions consultants' role in Sikta canal collapse". பார்க்கப்பட்ட நாள் 2020-06-13.
  4. "Only 60pc Sikta project completed in 14 years". The Himalayan Times. 2019-11-12. பார்க்கப்பட்ட நாள் 2020-06-13.
  5. Kathm, The; Post, u (2016-09-29). "Sikta irrigation project: Damaged canal section repaired". Glocal Khabar. பார்க்கப்பட்ட நாள் 2020-06-13.
  6. Oli, Arjun. "Political meddling behind irregularities at Sikta project: Locals". My Republica. பார்க்கப்பட்ட நாள் 2020-06-13.
  7. Oli, Arjun. "'Faulty design' behind recurring Sikta canal collapse". My Republica. பார்க்கப்பட்ட நாள் 2020-06-13.
  8. Setopati, Setopati. "Rs 2b corruption case against ex-minister Bikram Pandey over Sikta". Setopati. பார்க்கப்பட்ட நாள் 2020-06-13.
  9. "सिक्टा सिँचाइ आयोजनामा भ्रष्टाचार". सिक्टा सिँचाइ आयोजनामा भ्रष्टाचार. பார்க்கப்பட்ட நாள் 2020-06-13.