உள்ளடக்கத்துக்குச் செல்

சாலியபுரம் இராணுவ முகாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாலியபுர படை முகாம்
அனுராதபுரம், வடமத்திய மாகாணம்
வகை படை முகாம்
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது இலங்கைத் தரைப்படை
இட வரலாறு
பயன்பாட்டுக்
காலம்
1980–தற்போது
காவற்படைத் தகவல்
காவற்படை கஜபா படையணி

சாலியபுர இராணுவ முகாம் (Saliyapura Army Camp) என்பது இலங்கையின் வட மத்திய மாகாணத்தில் உள்ள பண்டைய நகரமான அனுராதபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு படைத் தளமாகும். அரசு காணியில் இந்த முகாம் இரஜரட்ட ரைபிள்ஸின் படைப்பிரிவு தலைமையகமாக துவக்கப்பட்டது. 1983 இல் இலங்கை தரைப்படையின் கஜபா படையணியின் படைப்பிரிவு தலைமையகமாக இது ஆக்கப்பட்டது. இதன் அருகிலேயே அனுராதபுரம் வானூர்தி நிலையம் கட்டப்பட்டுள்ளது. கஜபா படையணி மற்றும் ஸ்லாட்ர்டர் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்படும் நாட்டின் முதன்மையான தொழில் முறை அல்லாத மோட்டார் பந்தய நிகழ்வுகளில் ஒன்றான கஜபா சூப்பர்கிராஸ் என்னும் வருடாந்திர வெளிப்புற கரட்டுநில இருசக்கரப் போட்டிக்கான தளம் இதுவாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sri Lanka Association of Racing Drivers and Riders". Archived from the original on 2009-07-01.