சார்புநிலை (செயற்திட்ட மேலாண்மை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செயற்திட்ட மேலாண்மையில் சார்புநிலை (dependency) என்பது பணிகள் நிறைவேற்றப்பட வேண்டிய கால வரிசையுடனும், பணிகளுக்கு இடையேயான இணைப்புகளுடனும் தொடர்புடையது. ஒரு பணி இன்னொன்றில் தங்கி இருக்குமா? பல பணிகள் சம காலத்தில் செய்யப்படக் கூடியவையா? வெளிக் காரணிகளில் பணி தங்கி உள்ளதா? போன்ற கேள்விகளுக்கு பதில்தர ஒரு செயற் திட்டத்தின் சார்புநிலைகளை விளங்கிக் கொள்ளல் அவசியமாகும்.

பொதுவான சார்புநிலை வகைகள்[தொகு]

 1. முடிக்கவேண்டும் தொடங்குவதற்கு(மு.தொ) (Finish to Start)
  • A மு.தொ B என்பது "A யை முடிக்கு முன்னர் B யைத் தொடங்க முடியாது" என்பதைக் குறிக்கும். இன்னொரு வகையிற் சொல்வதானால், "செயல் B யைத் தொடங்க வேண்டுமாயின் செயல் A முடிந்திருக்க வேண்டும்".[1]
  • (அத்திவாரம் வெட்டுதல்) மு.தொ (காங்கிரீட்டு இடுதல்)
 2. முடிக்கவேண்டும் முடிப்பதற்கு (மு.மு) (Finish to Finish)
  • A மு.மு B என்பது "A யை முடிக்கு முன்னர் B யை முடிக்க முடியாது" என்பதைக் குறிக்கும். இன்னொரு வகையிற் சொல்வதானால், "செயல் B யை முடிக்க வேண்டுமாயின் செயல் A முடிந்திருக்க வேண்டும்".[1]
  • (கடைசி அத்தியாயத்தை எழுதி முடித்தல்) மு.மு (முழு நூலையும் எழுதி முடித்தல்)
 3. தொடங்கவேண்டும் தொடங்குவதற்கு (தொ.தொ) (Start to Start)
  • A தொ.தொ B என்பது "A யைத் தொடங்கு முன்னர் B யைத் தொடங்க முடியாது" என்பதைக் குறிக்கும். இன்னொரு வகையிற் சொல்வதானால், "செயல் B யைத் தொடங்க வேண்டுமாயின் செயல் A யைத் தொடங்கியிருக்க வேண்டும்".[1]
  • (செயல் திட்ட வேலைகளைத் தொடங்குதல்) தொ.தொ (திட்ட மேலாண்மை வேலைகளைத் தொடங்குதல்)
 4. தொடங்கவேண்டும் முடிப்பதற்கு(தொ.மு)(Start to Finish)
  • A தொ.மு B என்பது "A யைத் தொடங்கு முன்னர் B யை முடிக்க முடியாது" என்பதைக் குறிக்கும். இன்னொரு வகையிற் சொல்வதானால், "செயல் B யைத் தொடங்க வேண்டுமாயின் செயல் A யை முடித்திருக்க வேண்டும்".[1]
  • (புதிய முறை மாற்றுத் தொடக்கம்) தொ.மு (முந்திய முறை மாற்று முடிதல்)

மேற்கோள்கள்[தொகு]