உள்ளடக்கத்துக்குச் செல்

சாரா டீஸ்டேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாரா டீஸ்டேல்

சாரா டீஸ்டேல் (Sara Teasdale 8 ஆக்சுடு 1884- 29 சனவரி 1933) அமெரிக்கப் பெண் கவிஞர் ஆவார்.[1] 1918-ம் ஆண்டு கவிதைக்கான புலிட்சர் பரிசைப் பெற்றவர். சாரா டீஸ்டேலின் கவிதைகள், ஒரு பெண்ணின் தீவிரமான அகவுணர்வைப் பல வகைகளில் வெளிப்படுத்தின. இவர் தமது 49 ஆம் அகவையில் தற்கொலை செய்து கொண்டு இறந்துபோனார்.

வாழ்க்கைக் குறிப்புகள்

[தொகு]

சாரா டீஸ்டேல்  செயின்ட் லூயி மிசூரியில் பிறந்தார். குடும்பத்தில் கடைசிக் குழந்தையாகவும் உடல் மெலிந்தும் இருந்ததால் மிகவும் பாதுகாப்பான சூழ்நிலையில் வளர்ந்தார்.  15 ஆம் அகவையில் தம்  நினைவுகளையும் பரவசப்படுத்திய கனவுகளையும் கவிதையில் வடித்தெடுத்தார். இவர் பள்ளிக்குச் செல்லாமல் இல்லத்திலேயே தனியாகக் கல்வி கற்றார். அடிக்கடி சிகாகோ நகருக்குச் சென்று ஆரியட் மன்றோ  கவிதை இதழோடு தொடர்பு கொண்டு இயங்கினார். ரீடிஸ் மிர்ரர் என்ற முதல் கவிதை செய்தித்தாளில் வெளிவந்தது. முதல் கவிதைத் தொகுப்பு 1907 இலும்  இரண்டாம் தொகுப்பு 1911 இலும்  பின்னர்  பிற கவிதைகளும் வெளிவந்தன. 1918 இல் புலிட்சர் பரிசு கிடைத்தது. 1914 இல் திருமணம் செய்து கொண்டார். 1929 இல் மண முறிவு ஏற்பட்டது. நிமோனியாவினால் தாக்குற்று, உடல் நலம் கெட்டுத் தம்மைத் தாமே 1933 ஆம் ஆண்டில் மாய்த்துக் கொண்டார்.[2]

மேற்கோள்

[தொகு]
  1. Collection of Teasdale's letters in the Berg Collection at the New York Public Library.
  2. https://www.britannica.com/biography/Sara-Teasdale
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரா_டீஸ்டேல்&oldid=2707779" இலிருந்து மீள்விக்கப்பட்டது