சாரா டி. முகோபாத்தியாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முனைவர் சாரா டி. சுட்டீவ்ர்ட் முகோபாத்தியாய் (Dr. Sarah T. Stewart-Mukhopadhyay) ஓர் அமெரிக்க வானியலாளரும் கோள் அறிவியலாளரும் ஆவார். இவர் கோள் உருவாக்கம், கோள் நிலவியல், பொருள் அறிவியல் ஆய்வுகளுக்காக பெயர்பெற்றவர் ஆவார்.[1][2] இவர் தேடிசு கலிபோர்னியா பல்கலைக்கழகப் புவி, கோள் அறிவியல் துறைப் பேராசிரியராக உள்ளார்.[1] இவர் 2003 இல் இருந்து ஆர்வாடு பல்கலைக்கழகப் புவி, கோள் அறிவியல் துறை வருகைதரு பேராசிரியராகவும் உள்ளார்.[3] இவரை மக்கள் அறிவியல் இதழ் அரிய பத்து பேரறிஞர்களில் ஒருவராக அறிவித்துள்ளது. இவரை வானியல் இதழ் வானியலின் எழுச்சி விண்மீன் என 2013 இல் கூறியுள்ளது. கண்டுபிடிப்பு இதழ் இவரை 2015 இல் அரிய 100 அறிவியலாளரில் ஒருவராக அறிவித்தது.[4][5] இவர் அமெரிக்க வானியல் கழகத்தில் இருந்து தன்னிகரற்ற இளம் அறிவியலளர் சதனை விருதைப் பெற்றுள்ளார்.[6]

இளமையும் கல்வியும்[தொகு]

இவர் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் இருந்து 1995 இல் வானியற்பியலிலும் இயற்பியலிலும் இளவல் பட்டம் பெற்றார்.[3] She completed her இவர் 2002 இல் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து முனைவர் பட்டத்தையும் பெற்றார்.[6]

வாழ்க்கைப்பணியும் ஆராய்ச்சியும்[தொகு]

இவர் ஆர்வார்டு அதிர்ச்சி அமுக்க ஆய்வகத்தின் இயக்குந்ராக உள்ளார்.[3] இவர் கால்டெக்கில், நம் சூரியக் குடும்பச் சூழலில், பனிக்கட்டியில் அதிர்ச்சிப் பரவலை ஆய்வு செய்த முதல் பெண்மணி ஆவார்.[2] இவரது ஆய்வுக்குழு பெருமொத்தல்களிலும் மொத்தல் குழிப்பள்ளங்களிலும் கோள் உருவாக்கம் பற்றி ஆர்வம் கொண்டுள்ளது. இவர் 2009 இல் உரேய் பரிசைப் பெற்றார்.[7] அதிர்ச்சித் தூண்டலால் உருவாகும் பனிக்கட்டி உருகல் ஆய்வு, செவ்வாய் மேற்பரப்பில் இப்போது முனைவாகச் செயல்படும் நிகழ்வு நீர்ம வடிவ நீரின் அரிப்பே என்பதை எடுத்துக்காட்ட உதவியது.[8]

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

இவர் 2009 இல்லமெரிக்க வானியல் கழகத்தின் கோள் அறிவியல் பிரிவில் இருந்து அரோல்டு சி. உரேய் பரிசைப் பெற்றார்.[6] இவர் 2001 இல் அமெரிக்க புவியிய்ல் கழகத்தில் இருந்து இசுடீபன் ஈ. துவோர்னிக் கோள் நிலவியல் மாணவர் கட்டுரை விருதைப் பெற்றார்.[9] இவர் 2002 இல் வாழ்சிங்ட்ன், கார்னிகி நிறுவனத்தில் குரோவ் கார்ல் கில்பர்ட் முதுமுனைவர் ஆய்வுநல்கையைப் பெற்று ஆய்வைத் தொடங்கினார். இவர் 2003 இல் அறிவியலாளருக்கும் பொறியிய்லாளருக்குமான குடியரசுத் தலைவரின் தொடக்கநிலை வாழ்க்கைப்பணி விருதைப் பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Sarah T. Stewart | UC Davis Earth and Planetary Sciences". geology.ucdavis.edu. 2016-06-18 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 "Sarah T. Stewart-Mukhopadhyay Awarded 2009 Harold C. Urey Prize". www.spaceref.com. 2016-06-18 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.0 3.1 3.2 "Sarah T. Stewart-Mukhopadhyay". eps.harvard.edu. 2016-05-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-06-15 அன்று பார்க்கப்பட்டது.
  4. "brilliant 10 2010". Popular Science. 2016-06-15 அன்று பார்க்கப்பட்டது.
  5. Karri, Farron (July 2013). "Astronomy's rising stars". Astronomy. 
  6. 6.0 6.1 6.2 "2009 DPS Prize Recipients | Division for Planetary Sciences". dps.aas.org. 2016-06-18 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Harold C. Urey Prize in Planetary Science". Division of Planetary Sciences of the American Astronomical Association. 2015-01-12 அன்று பார்க்கப்பட்டது.
  8. "2009 DPS Prize Recipients - Division for Planetary Sciences". dps.aas.org.
  9. "GSA Planetary Geology Division | Dwornik Awards". rock.geosociety.org. 2016-06-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-06-15 அன்று பார்க்கப்பட்டது.