சாரணர் இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சாரணீய இயக்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாரணர் இயக்கம்
WikiProject Scouting fleur-de-lis dark.svg
Country உலகளவில்
ஐக்கிய இராச்சியம் (ஆரம்பம்)
Founded 22 பிப்ரவரி 1907
Founder பேடன் பவல்
Scouting portal

சாரணர் இயக்கம் உலகளாவிய அளவில் செயற்படும் ஓர் இளைஞர் இயக்கமாகும். இது 1907 ஆம் ஆண்டு சர் பேடன் பவல் பிரபுவால் தொடங்கப்பட்டது. இவ்வியக்கம் இளைய சமூகத்தினர் மத்தியில் உடல், உள சமூக ரீதியான பல மேம்பாடுகளை ஏற்படுத்தவே உருவாக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் சாரணர் இயக்கம் (ஆண்களுக்கானது) குருளைச்சாரணர் ஆண்கள் சாரணர் என பல்வேறு விதமாகப் பிரிந்து செறிந்து காணப்பட்டது. அதேவேளை 1910 ஆம் ஆண்டில் பெண்களுக்காக இவ்வமைப்பு ஆரம்பிக்கப்பட்டது இதுவும் ஆண்களுடைய அமைப்பைப்போலவே சிறுதோழியர், பெண் சாரணியர் என பல்வேறு விதமாகப் பிரிந்து செறிந்து காணப்பட்டது. சாரணர் இயக்கம் உலகிலுள்ள இளைஞர் அமைப்புக்களில் உலகம் முழுவதும் பரந்து காணப்படும் அமைப்புக்களில் ஒன்றாகும். 2007 ஆம் ஆண்டளவில் உலகின் 216 நாடுகளிலும் ஆண்களும் பெண்களுமாக மொத்தமாக 8 மில்லியனுக்கும் அதிகமான சாரணர்கள் உள்ளனர்.

கூடலூர் என்.எஸ்.கே.பி. மேல்நிலைப்பள்ளி சாரணர் இயக்க மாணவர் குழு படம்

உறுப்பு நாடுகள்[தொகு]

216 ஆம் நாடுகளிலிருந்தும் 2010 ஆம் ஆண்டளவில் உலகம் பூராகவும் 32 மில்லியனுக்கும் அதிகமான உறுதி செய்யப்பட்ட சாரணர்கள் காணப்படுகின்றனர்.[1], அதேபோல 2006 ஆம் ஆண்டளவில் 10 மில்லியனுக்கும் அதிகமான பெண் சாரணியர்கள் காணப்படுகின்றனர்.[2]

தரவரிசைப்படி 20 நாடுகளின் சாரண சாரணியர், (ஆண், பெண்) உறுப்பினர்கள் பட்டியல்.[n.b. 1],[3][4]
நாடு உறுப்பினர்கள்[1][2] சனத்தொகை
பங்குபற்றுவோர்
சாரணியம்
அறிமுகப்படுத்தப்பட்டது
பெண் சாரணியம்
அறிமுகப்படுத்தப்பட்டது
இந்தோனேசியா 17,100,000  7.2% 1912 1912
அமெரிக்கா 7,500,000  2.4% 1910 1912
இந்தியா 4,150,000  0.3% 1909 1911
பிலிப்பைன்ஸ் 2,150,000  2.2% 1910 1918
தாய்லாந்து 1,300,000  1.9% 1911 1957
பங்களாதேஷ் 1,050,000  0.7% 1920 1928
ஐக்கிய இராச்சியம் 1,000,000  1.6% 1907 1909
பாக்கிஸ்தான் 575,000  0.3% 1909 1911
கென்யா 480,000  1.1% 1910 1920
தென் கொரியா 270,000  0.5% 1922 1946
செருமனி[n.b. 2] 250,000  0.3% 1910 1912
உகண்டா 230,000  0.6% 1915 1914
இத்தாலி[n.b. 3] 220,000  0.4% 1910 1912
கனடா 220,000  0.7% 1908 1910
ஜப்பான் 200,000  0.2% 1913 1919
பிரான்சு[n.b. 4] 200,000  0.3% 1910 1911
பெல்ஜியம்[n.b. 5] 170,000  1.5% 1911 1915
போலந்து[n.b. 6] 160,000  0.4% 1910 1910
நைஜீரியா 160,000  0.1% 1915 1919
ஆங்கொங் 160,000  2.3% 1914 1916
  1. Full tables on List of World Organization of the Scout Movement members and List of World Association of Girl Guides and Girl Scouts members.
  2. Including 90,000 non-aligned Scouts and Guides, see Scouting in Germany
  3. Including 30,000 non-aligned Scouts and Guides, see Scouting in Italy
  4. Including 60,000 non-aligned Scouts and Guides, see Scouting in France
  5. Including 5,000 non-aligned Scouts and Guides, see Scouting in Belgium
  6. Including 20,000 non-aligned Scouts and Guides, see Scouting in Poland

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Triennal review: Census as at 1 December 2010". World Organization of the Scout Movement. பார்த்த நாள் 2011-01-13.
  2. 2.0 2.1 "Our World". World Association of Girl Guides and Girl Scouts (2006). பார்த்த நாள் 2006-12-07.
  3. Scouting 'round the World. Le scoutisme à travers le monde (11th ed.). World Scout Bureau. 1979. ISBN 2-88052-001-0. 
  4. Trefoil Round the World (11th ed.). World Association of Girl Guides and Girl Scouts, World Bureau. 1997. ISBN 0-900827-75-0. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரணர்_இயக்கம்&oldid=2208712" இருந்து மீள்விக்கப்பட்டது