சாரணிய வாக்குறுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாரணிய வாக்குறுதி
செருமானிய சாரணர் வாக்குறுதி அளிக்கும் போது
நிறுவப்பட்டல்1908
Scouting portal

சாரணிய வாக்குறுதி அல்லது சாரணர் உறுதிமொழி (Scout Promise) என்பது சாரணர் இயக்கத்தில் சேரும் குழந்தையால் வழங்கப்படும் வாக்குறுதியாகும். 1908 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கான சாரணியம் வெளியிடப்பட்டதிலிருந்து, உலகெங்கிலும் உள்ள அனைத்து சாரணர்கள் மற்றும் பெண் வழிகாட்டிகள் இயக்கத்தின் இலட்சியங்களுக்கு ஏற்ப வாழ்வதாக ஒரு சாரணர் அல்லது வழிகாட்டி உறுதிமொழியை எடுத்து சாரணர் சட்டத்தின்படி குழுவில் சேர்கின்றனர். சாரணர் வாக்குறுதி மற்றும் சாரணர் சட்டத்தின் சொற்கள் காலப்போக்கில் மற்றும் நாட்டிற்கு நாடு சிறிது வேறுபடுகின்றன. பெரும்பாலான சாரணர் மற்றும் வழிகாட்டுதல் நிறுவனங்கள் "வாக்குறுதி" என்ற வார்த்தையைப் பயன்படுத்தினாலும், அமெரிக்காவின் சாரணர்கள் போன்ற சிலர் அதற்குப் பதிலாக "சத்தியம்" எனும் சொல்லினைப் பயன்படுத்துகின்றனர்.

பொதுவாக, சாரணர்கள் மற்றும் வழிகாட்டிகள் வாக்குறுதியைக் கூறும்போது மூன்று விரல் சாரணர் அடையாளத்தை உருவாக்குவார்கள்.

1908 ஆம் ஆண்டின் அசல் உரை[தொகு]

சாரணர் பற்றிய பேடன் பவல் தனது அசல் நூலில் சாரணர் வாக்குறுதியை பின்வருமாறு அறிமுகப்படுத்தினார்: [1]

சாரணராக ஆவதற்கு முன்னர் ஒரு மாணவர் அளிக்கும் வாக்குறுதி பின்வருமாறு:

  1. நான் கடவுளுக்கும் என் நாட்டிற்கும்
  2. என் கடமையைச் செய்யவும் பிறருக்கு உதவிபுரியவும்
  3. சாரண சட்டத்தைப் பின்பற்றி நடக்கவும் என்னால் இயன்றவரையில் முயல்வேன்

என்று என் மானமே சான்றாக உறுதி கூறுகிறேன்.

இந்த வாக்குறுதியினை ஏற்கும் போது, சாரணர் வலது கையை தோள்பட்டையளவு உயர்த்தி, உள்ளங்கையை முன்பக்கமாகப் பிடித்து, கட்டைவிரல் சுண்டு விரலின் நகத்தின் மீதும், மற்ற மூன்று விரல்களை நிமிர்ந்தும், மேல்நோக்கிச் சுட்டிக்காட்டியவாறு நிற்பார்.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Scouting for Boys (Part I ed.). 1908. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரணிய_வாக்குறுதி&oldid=3890246" இலிருந்து மீள்விக்கப்பட்டது