சாரணப்படை
ஒரு சாரணப்படை (Scout troop) என்பது சாரணர்கள், சாரணியர்கள், சாரணர் இயக்கம் ஆகியவற்றின் அடிப்படை அலகுகளை விவரிக்க பயன்படுத்தப்படும் ஒரு சொல் ஆகும். சாரணப்படை என்பது இராணுவம், காவல்காரா்கள் போன்ற படைகளில் போரிடுவது, பணிகளைச் செய்வது, குழுவாக சேர்ந்து செயல்படுவது ஆகியவற்றை சாரணப்படையில் செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது ஆகும்.[1]
சாரண - சாரணியா் மற்றும் சாரண இயக்கம்
[தொகு]சாரணர் இயக்கத்தில், சாரணப்படை என்பது சாரணர்கள், சாரணியர்களை உள்ளடக்கிய பல சாரண அணிகளைக் கொண்ட ஒரு நிறுவனப் பிரிவாகும். பெண் வழிகாட்டிகள் பெரும்பாலும் அணிக்குப் பதிலாக அலகு என்பதனையும் படைக்குப் பதிலாக நிறுவனம் என்ற சொற்களைப் பயன்படுத்துகின்றனர்.சிறிய குழுவில் ஆறு முதல் எட்டு சாரண, சாரணியர்கள் இருப்பார்கள். சாரண, சாரணியர்களின் வயது 10 முதல் 18 முடிய இருக்க வேண்டும்.[2] சாரணப்படையானது அதிலுள்ள எண்ணிக்கையை பொருத்து மாறுபடலாம். சாரணப்படையாது வழக்கமாக கூடும் இடத்தில் கூடிக்கொள்ளலாம். சில சாரணப் படை கூடுதலான செயல்பாடுகளையும் செய்யலாம். சில சமையங்களில் சாரணப்படைகள் மற்ற சாரணப் படைகளான பேவர்ஸ், குருளையா், ரோவர்ஸ் ஆகிய பல்வேறு குழுக்களுடன் சோ்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை கொடுக்கலாம்.
தலைமைப்பண்பு
[தொகு]சாரண, சாரணியரில் தலைமைப் பண்பை உருவாக்கி சிறந்த தலைவனை உருவாக்கவேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டது. சாரணப்படையானது சிறிய நான்கு குழுக்கலாகப் பிாிக்கப்பட்டு அந்த சிறிய குழுவிற்கு ஒரு தலைவனை உருவாக்க வேண்டும். சாரணர் தலைவர் தலைமையில் கண்ணிய மன்றக் கூட்டம் கூட்டப்படும். அந்த கண்ணிய மன்றக் கூட்டத்தில் அணித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். கண்ணிய மன்றக் கூட்டத்தில் அடுத்த நிகழ்ச்சிகள், செயல்பாடுகள் ஆகியவை விவாதிக்கப்படும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "What is a Scout Unit?". cubscoutideas.com. August 2012.
- ↑ Baden-Powell, Robert (2007). Scouting For Boys.