சாம் லால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாம் லால்Sham Lal
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியன்
பிறப்பு1938 (அகவை 84–85)
விளையாட்டு
விளையாட்டுசீருடற்பயிற்சி விளையாட்டு

சாம் லால் (Sham Lal) இந்தியாவைச் சேர்ந்த ஒரு சீருடற்பயிற்சி விளையாட்டு வீரராவார். 1956 ஆம் ஆண்டு ஆத்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்தில் நடைபெற்ற 16 ஆவது கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பாக 7 போட்டிகளில் லால் பங்கேற்றார். [1] சீருடற்பயிற்சி விளையாட்டிற்காக அருச்சுனா விருது பெற்ற முதல் நபர் என்ற பெருமை லாலுக்கு 1961 ஆம் ஆண்டு கிடைத்தது. [2] 1957 ஆம் ஆண்டு உருசிய நாட்டின் தலைநகரமான மாசுகோவில் நடைபெற்ற ஆறாவது இளையோர் மற்றும் மாணவர் உலகத் திருவிழாவிலும் முதல் முறையாக இவர் கலந்து கொண்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sham Lal Olympic Results". Sports-Reference.com (Sports Reference LLC). https://www.sports-reference.com/olympics/athletes/la/sham-lal-1.html. பார்த்த நாள்: 28 July 2019.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://www.sports-reference.com/olympics/athletes/la/sham-lal-1.html. 
  2. "Arjuna Award Winners 2020 | List of Previous Arjuna Awardees By Year" (in en-US). 6 February 2020. https://theprizewinner.com/arjuna-award-winners/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்_லால்&oldid=3731816" இருந்து மீள்விக்கப்பட்டது