சான் மிகுவல் சந்தை

ஆள்கூறுகள்: 40°24′56″N 3°42′32″W / 40.415438°N 3.708869°W / 40.415438; -3.708869
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சான் மிகுவல் சந்தை
Market of San Miguel
உள்ளூர் பெயர்
எசுப்பானியம்: சான் மிகுவல் சந்தை
அமைவிடம்மத்ரித்து, எசுப்பானியா
ஆள்கூற்றுகள்40°24′56″N 3°42′32″W / 40.415438°N 3.708869°W / 40.415438; -3.708869
Invalid designation
அலுவல் பெயர்சான் மிகுவல் சந்தை
வகைஅசையா சந்தை
தெரியப்பட்டது2000
உசாவு எண்RI-51-0010569
சான் மிகுவல் சந்தை is located in எசுப்பானியா
சான் மிகுவல் சந்தை
எசுப்பானியா இல் சான் மிகுவல் சந்தை
Market of San Miguel அமைவிடம்

சான் மிகுவல் சந்தை (Market of San Miguel) எசுப்பானியா நாட்டின் தலைநகரமான மத்ரித்து நகரத்தில் அமைந்துள்ள ஒரு மூடப்பட்ட சந்தையாகும். இச்சந்தை முதலில் 1916 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. 2003 ஆம் ஆண்டில் தனியார் முதலீட்டாளர்களால் வாங்கப்பட்டது. அவர்கள் சந்தையின் இரும்புக் கட்டமைப்பை புதுப்பித்து 2009 ஆம் ஆண்டில் மீண்டும் திறந்தனர்.[1]

குறிப்பு[தொகு]

சான் மிகுவல் சந்தையானது மத்ரித்து நகரத்து சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான ஒரு சந்தையாகும். ஏனெனில் இது பிளாசா மேயர் என்ற பொதுமக்கள் கூடுமிடத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் மத்ரித்து நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. சான் மிகுவல் ஒரு பாரம்பரிய மளிகை சந்தை அல்ல. மாறாக ஒரு சுவையான சிற்றுணவுகள் சந்தையாகும். 30 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட வெவ்வேறு விற்பனையாளர்கள் பலவிதமான புதிதாக தயாரிக்கப்பட்ட சிற்றுணவு வகைகளையும், வேகவைத்த பொருட்கள் மற்றும் பிற உணவுகளையும் விற்பனை செய்கின்றனர். பீர், ஒயின் மற்றும் சாம்பெயின் ஆகிய மதுவகைகளும் இங்கு கிடைக்கின்றன.[1][2]

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Wildman, Sarah (23 July 2009). "Madrid Market Bustles Again". New York Times. https://www.nytimes.com/2009/07/26/travel/26heads.html?_r=0. பார்த்த நாள்: 8 April 2015. 
  2. "Markets around the world: Mercado San Miguel from Madrid, Spain". FoodCocktail. Archived from the original on 14 April 2015. பார்க்கப்பட்ட நாள் 8 April 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்_மிகுவல்_சந்தை&oldid=3859252" இலிருந்து மீள்விக்கப்பட்டது