உள்ளடக்கத்துக்குச் செல்

சான்டா முயர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரண தேவதை
Our Lady of the Holy Death
Nuestra Señora de la Santa Muerte
தென் சாண்டா மியெர்டேவின் அருகில், டமாலிபாசில் சான்டா முயர்ட்டின் நெருக்கமான படம்
வேறு பெயர்கள்Lady of the Shadows, Lady of the Night, Lady of the Seven Powers, White Lady, Black Lady, Skinny Lady, Bony Lady, Mictecacihuatl (Lady of the Dead)
வகைA wide variety of powers, including love, prosperity, good health, fortune, healing, safe passage, protection against witchcraft, against assaults, against gun violence, against violent death. Protection of various jobs and outcasts.
ஆயுதம்அரிவாள்
சமயம்மெக்சிக்கோ மற்றும் (முதன்மையாக தென்மேற்கு) ஐக்கிய அமெரிக்கா
விழாக்கள்இறந்தோர் நாள், நவம்பர் 1, ஆகத்து 15

நியூசெரா செனோரா டி லா சான்டா முயர்ட் ( (Nuestra Señora de la Santa Muerteவார்ப்புரு:Pronunciation needed (Spanish for Our Lady of the Holy Death) or, colloquially, Santa Muerte (Holy Death), என்பது ஒரு பெண் தெய்வமாகும். இத்தெய்மானது  மெக்சிகன் நாட்டுப்புற சமயத்தவர்களால், குறிப்பாக நாட்டுப்புற கத்தோலிக்கர்களால், வணங்கப்படுகிறார். இவர் முதன்மையாக மெக்சிகோ மற்றும் தென்மேற்கு அமெரிக்காவில் மதிக்கப்படும் ஒரு பெண் தெய்வம் ஆகும். இவர் மரணத்தின் தேவதையாக கருதப்புடுகிறார். இந்த தேவதை  மனிதர்களைப் பாதுகாக்காப்பதாகவும், நோய்களை குணமாக்குவதாகவும், பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாகவும் பக்தர்களால் நம்புகிறார்கள்.[1] இந்த வழிபாட்டை கத்தோலிக்க திருச்சபை கண்டனம் செய்த போதிலும் 2000 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் அவரது வழிபாட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. சான்டா முயர்ட் அஸ்டெக் மக்கள் வணங்கிய கடவுளின் மறு அவதாரமாகக் கருதப்படுகிறது இத்தேவதையை  (நாகவற் மொழியில்  "மரண தேவதை" என குறிப்பிடப்படுகிறது.) இது க எசுபானிய இலக்கியத்திலும்  கலந்திருந்தது.[2]

முன்-கொலம்பியக் காலத்திலிருந்து மெக்சிகோ கலாச்சாரத்தில் இருந்த இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியாக இது உருவானது என்பதால்,[3] இதை பரவலாக இறந்தோர் நாள் நினைவு நிகழ்ச்சியில் காணலாம்.[4] இந்நாளில் இறந்தோருக்கெனத் தனியாக பூசை மேடைகள் கட்டி அவற்றில் சர்க்கரையால் ஆன மண்டையோடுகள், மரிகோல்ட் மலர்கள், இறந்தவர்களுக்குப் பிடித்த உணவுகள், பானங்கள் ஆகியவற்றைப் படைப்பது மரபு.[5] மெக்ஸிக்கோவின் கத்தோலிக்க தேவாலயத்தால் இவ்வழிபாட்டை தவறானது என கண்டிக்கப்படுகிறது, ஆனால் மெக்ஸிகோ கலாச்சாரத்தில் இவ்ழிபாடு அதிகரித்து வருகிறது.[6]

சான்டா முயர்ட்டின் தோற்றமானது எலும்புக்கூடுபோல் இருந்தாலும் கன்னி மேரி போலவே ஆடை, அலங்காரங்கள் செய்கிறார்கள். இவரது கையில் விவசாய அரிவாளும் உலக உருண்டையும் இருக்கின்றன.[7] அவரது மேலங்கியின் நிறம்  எந்த நிறத்திலும் இருக்கலாம், ஏனெனில் படத்தின் மேலும் குறிப்பிட்ட படங்கள் பக்தர்களுக்கு பக்தர்களிலிருந்து பரவலாகவும், சடங்கு செய்யப்படுவதன் பேரிலோ அல்லது மனு செய்யப்பட வேண்டுமென்பதையோ வேறுபடுகின்றன.

20 ஆம் நூற்றாண்டு வரை பெரும்பாலும் சான்டா முயர்ட் வழிபாடும்,  பிரார்த்தனை போன்ற பிற சடங்குகளும் பாரம்பரியமாக வீட்டில் தனித்தனியாக நடத்தப்பட்டன. 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, இந்த வழிபாடானது பொதுவெளியில் நடத்துவதாக மாறியது.[8][9] சான்டா முர்ட்டின் பக்தர்களின் எண்ணிக்கை கடந்த 10 முதல் 20 ஆண்டுகளில் மெக்சிக்கோ, அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்காவில் உள்ள 10-20 மில்லியன் ஆக இருக்காலம் என மதிப்பிடப்பட்டுள்ளது. சான்டா மியூர்ட் பெண் தேவதையை போன்ற ஆண் கடவுள்களான சான்டா மியூர்ட்டேவை பராகுவேயிலும், ரே பாஸ்குல் என்ற தெய்வத்தை கவுதமாலாவிலும் நாட்டும்புற சமயங்களில் வணங்கப்படுகின்றனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Chesnut 2012, ப. 6–7.
  2. "Santa Muerte: Holy Death - Raise the Horns". பார்க்கப்பட்ட நாள் 4 December 2016.
  3. Araujo Peña, Sandra Alejandro; Barbosa Ramírez Marisela; Galván Falcón Susana; García Ortiz Aurea; Uribe Ordaz Carlos. "El culto a la Santa Muerte: un estudio descriptivo [The cult of Santa Muerte:A descriptive study]" (in Spanish). Revista Psichologia (Mexico City: Universidad de Londres). http://www.udlondres.com/revista_psicologia/articulos/stamuerte.htm. பார்த்த நாள்: 2009-10-07. 
  4. Ramirez, Margaret. "'Saint Death' comes to Chicago". Chicago Tribune (Chicago). http://www.chicagotribune.com/news/nationworld/death-chicago-08,0,2114588.story. பார்த்த நாள்: 2009-10-07. 
  5. Garma, Carlos (2009-04-10). "El culto a la Santa Muerte [The cult of Santa Muerte]" (in Spanish). Mexico City: El Universal. http://www.eluniversal.com.mx/notas/590196.html. பார்த்த நாள்: 2009-10-07. 
  6. "The Vatican and Santa Muerte". 14 May 2013. பார்க்கப்பட்ட நாள் 4 December 2016.
  7. "Los Angeles believers in La Santa Muerte say they aren't a cult | The Madeleine Brand Show | 89.3 KPCC". 66.226.4.226. 2012-01-10. பார்க்கப்பட்ட நாள் 2013-02-09.
  8. Villarreal, Hector (2009-04-05). "La Guerra Santa de la Santa Muerte [The Holy War of Santa Muerte]" (in Spanish). Milenio semana (Mexico City: Milenio) இம் மூலத்தில் இருந்து 2009-10-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091016071830/http://semanal.milenio.com/node/331. பார்த்த நாள்: 2009-10-07. 
  9. Devoted to Death: Santa Muerte, the Skeleton Saint, R. Andrew Chesnut, OUP, 2012
"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்டா_முயர்ட்&oldid=3243591" இலிருந்து மீள்விக்கப்பட்டது