சானார்பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சானார்பாளையம் ஆனது நாமக்கல் மாவட்டத்திலுள்ள குமாரபாளையம் வட்டத்தில் அமைந்துள்ள குமாரபாளையம் நகருக்கு அருகில் உள்ளது. ஈரோட்டிலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது. நாடார் இன மக்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர்.இவ்வூரிலுள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயம் 200 வருட பழமையானது. 2010ம் ஆண்டு ஆலயம் மறுசீரமைப்பு செய்து கும்பாபிஷேகம் சிறப்பான முறைப்படி நடந்தது. விவசாயம் மற்றும் விசைத்தறி இவ்வூரின் பிரதான தொழில் ஆகும். மேட்டூர்அணை இடது கரை பாசனமும் அழகிய காவிரி ஆற்றின் கரையில் இவ்வூர் அமையபெற்றுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சானார்பாளையம்&oldid=2121390" இலிருந்து மீள்விக்கப்பட்டது