சாத் எல் காஃபாரா
சாத் எல் காஃபாரா | |
---|---|
அமைவிடம் | ஹெல்வன், ஹெல்வன் ஆளுநரகம், எகிப்து |
புவியியல் ஆள்கூற்று | 29°47′43″N 31°25′55″E / 29.79528°N 31.43194°E |
கட்டத் தொடங்கியது | கிமு ~2650 |
அணையும் வழிகாலும் | |
வகை | அணைக்கரை, கல்கட்டிடம் |
தடுக்கப்படும் ஆறு | வாடி கராவ் |
உயரம் | 14 m (46 அடி) |
நீளம் | 110 m (360 அடி) |
அகலம் (உச்சி) | 56 m (184 அடி) |
அகலம் (அடித்தளம்) | 98 m (322 அடி) |
நீர்த்தேக்கம் | |
உருவாக்கும் நீர்த்தேக்கம் | சாத்-எல்- நீர்த்தேக்கம் |
மொத்தம் கொள் அளவு | ~570,000 m3 (20,000,000 cu ft) Est. |
சாத் எல்-காஃபாரா (Sadd el-Kafara) , எகிப்து தலைநகர் கெய்ரோவில் 'காராவி' ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும். இந்த அணை பழங்கால எகிப்தியர்களால் கி.மு 2650 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதுதான் உலகிலேயே மிக தொன்மையான அணையாகும்.[1][2] முழுமையாக கட்டப்படாத இந்த அணை 111 மீ நீளமும் 14 மீ உயரமும் கொண்டது. அணையின் மையபாகத்தின் அகலம் 32 மீ.[3] இது சுவர்கள் அமைத்து கட்டப்பட்ட அணை அல்ல. ஆற்றின் குறுக்கே 37 அடி உயரமும் அடிப்பகுதி 78 அடி பருமனும் கொண்ட பெரும் கற்கள் 120 அடி இடைவெளி விட்டு பெரும் கற்சுவர்களைப் போல எழுப்பபட்டன. அந்த இடைவெளியின் அடிப்பாகம் 60 ஆயிரம் டன் எடை கொண்ட கூழாங்கற்களால் நிரப்பப்பட்டன. வெறும் கற்களை ஆற்றில் அடுக்கியே இந்த அணை கட்டப்பட்டது. தொல்லியல் ஆய்வுகள் இந்த அணையின் வயது சுமார் 4600 ஆண்டுகள் என்று கணிக்கின்றன. இந்த அணை இன்று இல்லை. அணையின் எச்சங்கள் மட்டுமே மிஞ்சியுள்ளன.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Fahlbusch, Henning. "Early Dams" (PDF). History Association. Archived from the original (PDF) on 29 மார்ச் 2020. பார்க்கப்பட்ட நாள் 20 July 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Key Developments in the History of Embankment Dams". SimScience. Archived from the original on 15 ஜூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 19 July 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Sadd-el-Kafara Dam". Structurae. பார்க்கப்பட்ட நாள் 21 July 2010.
- ↑ டி.எல்.சஞ்சீவிகுமாா் (நவம்பா் 2015). "காணாமல் போனது சாத் எல்-காஃபாரா". தி இந்து.