உள்ளடக்கத்துக்குச் செல்

சாத்தூர் சேகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாத்தூர் சேகரன்
பிறப்புசி. சந்திரசேகரன்
Sattur
இறப்பு01.01.2015
Sattur
தொழில்துணி வியாபாரம், பேராசிரியர்
தேசியம்இந்தியர்
கருப்பொருள்மொழி, தமிழ் வரலாறு
துணைவர்C.Saroja
பிள்ளைகள்6

சாத்தூர் சேகரன் (இறப்பு: 2015 ஜனவரி 1) என்பவர் ஒரு தமிழ் மொழி ஆய்வாளர் மற்றும் வரலாற்று ஆய்வாளராவார்.[1] இவர் சுமார் 10,000 பாடல்கள், 400 புதினங்கள், 40 காப்பியங்கள், 200 சிறுகதைகள் எழுதியிருப்பதோடு, 50 நாடகங்களையும் எழுதியுள்ளார். இவர் உலக தமிழாய்வு சங்கத்தின் தலைவராக இருந்தார்.[2]

இளமைக் காலம்

[தொகு]

இவரின் இயற்பெயர் சந்திரசேகரன் ஆகும். இவரது தந்தையின் பெயர் எஸ். செல்லையா, அவர் 8 மொழிகளைக் கற்றவர்.[3] இவர் தமிழ், ஆங்கிலம், வரலாறு, சமூகம், அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றில் முதுகலைப் பட்டமும், வரலாற்றில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றவர்.[4] தொழில்ரீதியாக துணி வியாபாரம் செய்தபோதும் மொழி ஆர்வத்தில் 120 மொழிகளைக் கற்று பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவும் இருந்துள்ளார்.[3]

மொழி ஆய்வு நூல்கள்

[தொகு]

இவர் எழுதிய மொழி ஆய்வு நூல்களின் பட்டியல்.

  1. தமிழும் ஆங்கிலமும்
  2. இருக்கு நூல் முதல் நூலுமல் மூலநூலுமல்ல
  3. உலகளாவிய மொழி
  4. தமிழக ஊா்ப் பெயா்கள்
  5. வானளாவிய தமிழ்
  6. இந்திய மக்கள் பெயர்கள்
  7. நல்ல தமிழை மறக்கலாமா?
  8. குமரிக் கண்டச் சொற்கள்
  9. தமிழ் மொழிச் சிந்தனைகள்
  10. மக்களின் பெரும் பெயர்ச்சி
  11. இடைக்காலத் தமிழ்
  12. இந்திய ஊர்ப் பெயர்கள்
  13. குமரிக் கண்டம் உண்மையே
  14. தமிழக மக்கள் பெயர்கள்
  15. சிந்து வெளி நாகரிகம்
  16. எண்ணும் எழுத்தும்
  17. தமிழின் ஊடும் பாவும்
  18. தொல்காப்பியரும் தொல்காப்பியமும்
  19. சமசுகிருதம் ஒரு மொழியல்ல[5]
  20. உலக நாகரிகங்கள் அனைத்தும் படைத்தவன் தமிழன்

தமிழ்த் தேசிய நூல்கள்

[தொகு]

இவர் எழுதிய தமிழ்த் தேசியம் பற்றிய நூல்கள்

  1. ஏன் வேண்டாம் துன்பத் திராவிடம்?
  2. சொந்த நாட்டில் தமிழன் அகதியா?
  3. தமிழன் பரம்பரை ஆண்டியா?
  4. ஏ தாழ்ந்த தமிழகமே!
  5. சின்ன நூலா நம்மை சிறை பிடிப்பது?
  6. தமிழ் தேசியம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழ்த்தொண்டில் சாத்தூா் சேகரன்". முத்துக்கமலம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
  2. "200 க்கும் மேற்பட்ட மொழிகளின் மூல மொழி தமிழே: தமிழாய்வு சங்க செயலர் தகவல்". தினமலர். https://www.dinamalar.com/news_detail.asp?id=229464. பார்த்த நாள்: 26 November 2021. 
  3. 3.0 3.1 "Textile trader claims to know 120 languages". New Straits Times. 14 January 1990. https://news.google.com/newspapers?nid=1309&dat=19900114&id=VaRUAAAAIBAJ&sjid=iZADAAAAIBAJ&pg=6782%2C3238397. பார்த்த நாள்: 27 November 2021. 
  4. "பன்மொழிப் புலவர் திரு. சாத்தூர் சேகரன் அவர்கள்". virudhaitholandi.blogspot.com/. முனைவர். அருனாபாரதி, வாரனாசி பல்கலைக்கழகம், காசி. பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
  5. "தாமஸ் சில வம்புக்கேள்விகள்". ஜெயமோகன். பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாத்தூர்_சேகரன்&oldid=3479911" இலிருந்து மீள்விக்கப்பட்டது