சாதுன் நிஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாதுன் நிஷா (Shahdun Nisha) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும் பீகார் மாநில மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1973ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி வேட்பாளராக ராம்கர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு பீகார் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இந்த இடைத்தேர்தலில் இவர் 28,994 வாக்குகள் பெற்றார்.[2] சாதுன் நிஷா இந்தியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் மஞ்சூர் அசன் கானின் மனைவி ஆவார். அசன் கான் 1972ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்ற பொதுத் தேர்தலில் ராம்கர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 1973-ல் இறந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Indian Express. "Marandi sure of his chances in Ramgarh bypoll"
  2. 2.0 2.1 Election Commission of India. Bye-election results 1952-95
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாதுன்_நிஷா&oldid=3776301" இலிருந்து மீள்விக்கப்பட்டது