உள்ளடக்கத்துக்குச் செல்

சாதாரண வகையீட்டுச் சமன்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு சார் மாறியினது வகைக்கெழுக்களையும் செயலிகளையும் கொண்ட ஒரு வகையீட்டு சமன்பாட்டை சாதாரண வகையீட்டுச் சமன்பாடு என்பர்.

சாதரண வகையீட்டுச் சமன்பாடு கேத்திர கணிதம், இயக்கவியல், வானியல் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றது. ஆல்வேறு கணிதவியலாளர்கள் சாதாரண வகையீட்டுச் சமன்பாட்டின் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் பங்களித்த போதிலும் நியூட்டன், கிளைரோட் மற்றும் எயூலர் போன்றோர் முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றார்கள்.

நேர்கோடற்ற வகையீட்டுச் சமன்பாடுகளைப் பயன்படுத்தி எல்லா இடங்களிலும் உறுதியான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாது. உதாரணமாக மக்கள் தொகைக் கணிப்பீடு தொடர்பான பிரசினங்களின் தீர்வுகளுக்கு அண்ணளவான பெறுமானங்களையோ அல்லது எதிர்பார்க்கப்படும் பெறுமானங்களியோ மட்டுமே பெறமுடியும்.