சாண்டா மரியா அசுண்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாண்டா மரியா அசுண்டா

சாண்டா மரியா அசுண்டா (Santa Maria Assunta) என்பது ஓர் உரோமன் கத்தோலிக்க திருச்சபை பேராலயமாகும். வடமேற்கு இத்தாலியில் பியத்மாண்ட் மண்டலத்தின் நோவாரா மாகாணம் கேமேரி நகரில் இப்பேராலயம் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

1173 ஆம் ஆண்டிலிருந்து இத்தேவாலயம் சான் மைக்கேல் என்ற பெயரில் கேமேரியில் அறியப்பட்டு வந்துள்ளது. பின்னர் இது வெள்ளையர்களின் தேவாலயம் என அழைக்கப்பட்டது. கேமேரியிலிருந்த மற்றொரு தேவாலயமான சாண்டிசுமோ சேக்ரமெண்டோ தேவாலயம் இதை எதிர்த்தது. இவ்விரண்டு தேவாலயங்களுமே உடுக்கும் அங்கி நிறத்தால் மட்டுமே வேறுபடும் தீவிரமான கிறித்துவ சகோதரர்களின் அமைப்புகளாகும். தேவதூதர் புனித மைக்கேலின் தோழமை கூட்டுறவால் இத்தேவாலயம் அதிகாரப்பூர்வமாக 1565 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

தேவாலய கட்டட முகப்பின் இரண்டு மாடிகளிலும் வெற்று உட்குழிவுகளுடன் கூடிய எட்டு செவ்வகத் தூண்கள் காணப்படுகின்றன. எளிமையான உட்புறத்தில் செவ்வகத்தூண்கள் பளிங்கு கற்களால் ஆக்கப்பட்டுள்ளன. பெரிய மர பலிபீடத்தில் புனித மைக்கேலின் ஓவியம் சித்தரிக்கப்பட்டுள்ளது. எதிர்முகப்பின் மேற்பகுதியில் கைப்பிடி வைக்கப்பட்ட சிறுதூண் வரிசை அமைக்கப்பட்டுள்ளது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Comune of Cameri, Tourism Guide, entry on church.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாண்டா_மரியா_அசுண்டா&oldid=2998205" இலிருந்து மீள்விக்கப்பட்டது