சாங் ஈ 3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாங் ஈ 3
Chang'e 3
Chang'e 3 lander and rover credit Beijing Institute of Spacecraft System Engineering.png
தரையிறங்கு மற்றும் தேட்ட ஊர்திகளின் வரைபடம்
திட்ட வகைதரையிறங்கு ஊர்தி, சந்திரத் தேட்ட ஊர்தி
இயக்குபவர்சீன தேசிய விண்வெளி நிர்வாகம்
திட்டக் காலம்3 மாதங்கள்[1]
விண்கலத்தின் பண்புகள்
தயாரிப்புசாங்காய் ஏரோசுபேசு சிஸ்டம் எஞ்சினியரிங் இன்ஸ்டிடியூட்
Landing mass1,200 kg (2,600 lb)
தேட்ட ஊர்தி: 120 kg (260 lb)[2][3]
பரிமாணங்கள்தேட்ட ஊர்தி: 1.5 m (4.9 ft) உயரம்
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்1 திசம்பர் 2013, 17:30 ஒசீநே[4]
ஏவுகலன்லாங் மார்ச் 3B Y-23
ஏவலிடம்சைச்சாங் செயற்கைக்கோள் ஏவுநிலையம் ஏவுதளம்-2
நிலவு சுற்றுக்கலன்
சுற்றுப்பாதையில் இணைதல்6 திசம்பர் 2013, 9:53 UTC[5]
நிலவு தேட்ட ஊர்தி
தரையிறங்கிய நாள்14 திசம்பர் 2013[6]
தரையிறங்கிய இடம்சைனசு இரிடியம்

சாங் ஈ 3 (Chang'e 3, சீனம்: 嫦娥三号பின்யின்: Cháng'é Sānhào) சீன தேசிய விண்வெளி நிர்வாகத்தால், நிலவுப் பரப்புத் தேடல் திட்டத்தின் கீழ் உள்ளூர் நேரப்படி திசம்பர் 2, 2013 காலையில் (ஒ.அ.நே திசம்பர் 1) ஏவப்பட்ட நிலவு இறங்கூர்தியும் தேட்ட ஊர்தியுமாகும். இது சீனாவின் நிலவுப் பரப்புத் தேடல் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் அங்கமாகும்.[4][7][8] இது சீனாவின் முதல் நிலவுப்பரப்புத் தேட்டை ஊர்தியாகும்.

இந்த விண்வெளிக்கலன் சீனத் தொன்மவியலின்படி நிலவுக் கடவுளின் பெயரான சாங் ஈ என்பதைக் கொண்டிருக்கிறது. முன்னதாக சாங் ஈ 1, சாங் ஈ 2 சுற்றுக்கலன்கள் அனுப்பப்பட்டுள்ளன. நிலவுப் பரப்புத் தேட்டை ஊர்தியின் பெயர் யூட்டு என இடப்பட்டுள்ளது. மரகத முயல் எனப் பொருள்படும் இப்பெயர் இணைய கருத்துக்கணிப்பின்படி இடப்பட்டுள்ளது. சீனத் தொன்மவியல் கதைகளின்படி நிலவில் நிலவுக் கடவுளுக்குத் துணையாக வெள்ளை வண்ண மரகத முயல் வாழ்வதாக நம்பப்படுகிறது[9]. இது நிலவின் சுற்றுப்பாதையில் திசம்பர் 6, 2013 (உள்ளூர் நேரம்) இணைந்தது.[10]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Chang’e-3: China To Launch First Moon Rover In 2013". Asian Scientist. 7 மார்ச் 2012. http://www.asianscientist.com/topnews/chang-e-3-china-first-moon-rover-launch-in-2013/. பார்த்த நாள்: 5 ஏப்ரல் 2012. 
  2. "Chinese Space Program – Chang'e 3". Dragon in Space. 2013-12-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 திசம்பர் 2012 அன்று பார்க்கப்பட்டது.
  3. "中国已造出国产核电池 将装上嫦娥三号月球车_新闻_腾讯网". News.qq.com. 2012-08-12. 2013-12-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-12-02 அன்று பார்க்கப்பட்டது.
  4. 4.0 4.1 "China Starts Manufacturing Third Lunar Probe". English.cri.cn. 2013-12-02 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Chang'e-3 enters lunar orbit". Xinhuanet. 2013-12-06. 2013-12-06 அன்று பார்க்கப்பட்டது.
  6. China Will Kick Off திசம்பர் By Launching A Probe To The Moon - Forbes[தொடர்பிழந்த இணைப்பு]
  7. "China's Chang'e-3 to land on moon next year". China Daily. 11 நவம்பர் 2012. 12 நவம்பர் 2012 அன்று பார்க்கப்பட்டது.
  8. "China Readying 1st Moon Rover for Launch This Year". Space.com. 19 சூன் 2013. 23 சூலை 2013 அன்று பார்க்கப்பட்டது.
  9. Ramzy, Austin (26 November 2013). "China to Send ‘Jade Rabbit’ Rover to the Moon". The New York Times. http://sinosphere.blogs.nytimes.com/2013/11/26/china-to-send-jade-rabbit-rover-to-the-moon/?_r=1. பார்த்த நாள்: 2 December 2013. 
  10. China moon rover enters lunar orbit: Xinhua
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாங்_ஈ_3&oldid=3641567" இருந்து மீள்விக்கப்பட்டது