சல்போனைல் நைட்ரீன்
Appearance
சல்போனைல் நைட்ரீன் (Sulfonyl nitrene) என்பது R-SO2N என்ற பொதுவான வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும். அறியப்பட்ட சல்போனைல் நைட்ரீன்களில் மெத்தில் சல்போனைல் நைட்ரீன், முப்புளோரோமெத்தில் சல்போனைல் நைட்ரீன் மற்றும் டோலில் சல்போனைல் நைட்ரீன் ஆகியவை அடங்கும்.[1] மேலும் புளோரோசல்போனைல் நைட்ரீன் FSO2N என்ற சேர்மமும் அறியப்படுகிறது.[2] ஆனால் இது FNSO2 சேர்மமாக மறுசீரமைப்பு அடைகிறது. சல்போனைல் நைட்ரீன்களை சல்போனைல் அசைடை (RSO2N3) சூடாக்குவதன் மூலம் தயாரிக்க இயலும்.[3]
கந்தக அணுவுடன் ஒரே ஓர் ஆக்சிசன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ள சல்பினைல் நைட்ரீன்களிலிருந்து இவை வேறுபடுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Shainyan, Bagrat A.; Kuzmin, Anton V. (February 2014). "Sulfonyl nitrenes from different sources: computational study of formation and transformations". Journal of Physical Organic Chemistry 27 (2): 156–162. doi:10.1002/poc.3254.
- ↑ Zeng, Xiaoqing; Beckers, Helmut; Willner, Helge (4 February 2013). "Thermally Persistent Fluorosulfonyl Nitrene and Unexpected Formation of the Fluorosulfonyl Radical". Journal of the American Chemical Society 135 (6): 2096–2099. doi:10.1021/ja312073w. பப்மெட்:23363420.
- ↑ Abramovitch, Rudolph A.; Knaus, G. N.; Uma, V. (December 1969). "Aromatic substitution by sulfonyl nitrenes. Singlet or triplet reactive intermediates". Journal of the American Chemical Society 91 (26): 7532–7533. doi:10.1021/ja01054a065.