சர்தாபென் அனில்பாய் படேல்
சர்தாபென் அனில்பாய் படேல் (Shardaben Anilbhai Patel) (பிறப்பு: மார்ச் 21, 1948) ஒரு இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவையில் உறுப்பினரும் ஆவார்.
சுயசரிதை
[தொகு]ஷர்தாபென் அனில்பாய் படேல் என்.எம் நூதன் சர்வ வித்யாலயாவில் தன்னுடைய பள்ளிப்படிப்பினை நிறைவு செய்தார். 1964 ஆம் ஆண்டில் அவர் இளங்கலை முதலாம் ஆண்டு நிறைவு செய்தார். 1965-66 இல் உள்ள எம்.என் கல்லூரியில் இருந்து பட்டப்படிப்பைத் தொடராமல் விலகி விட்டார்.[1][2]
அகமதாபாத்தில் உள்ள ஸ்ட்ரீ களவணி உத்தேஜக் மண்டலின் துணைத் தலைவராக உள்ளார்.அவர் அறங்காவலர் குழுவில் இடம் பெற்றிருந்தார். படேல் பல்கலைக்கழகம் , கணபத் வித்யாநகரில் உள்ள எம்.ஜி.படேல் சைனிக் பெண்கள் ஆளும் குழுவின் தலைவராக உள்ளார்.[1] 2019 ம் ஆண்டு இந்திய பொதுத் தேர்தலில் பங்கேற்று மெக்சனா தொகுதியிலிருந்து 17 ஆம் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1][3][4][5][6]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]ஷர்தாபென் படேல் குஜராத்தின் தொழில்துறை அமைச்சராக பணியாற்றிய தொழிலதிபரும் அரசியல்வாதியுமான அனில்குமார் படேலை (1944–2018) மணந்தார் . அவர்களுக்கு ஆசித் மற்றும் ஆனந்த் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.[7]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "BJP nominates Sharda Patel for Mehsana LS seat". Ahmedabad Mirror. Ist. 3 April 2019. https://ahmedabadmirror.indiatimes.com/ahmedabad/others/bjp-nominates-sharda-patel-for-mehsana-ls-seat/articleshow/68695895.cms.
- ↑ "Shardaben Anilbhai Patel(Bharatiya Janata Party(BJP)):Constituency- MAHESANA(GUJARAT) – Affidavit Information of Candidate".
- ↑ "BJP fields Shardaben Patel from Mehsana, repeats Surat MP". DNA India (in ஆங்கிலம்). 3 April 2019. பார்க்கப்பட்ட நாள் 23 April 2019.
- ↑ "Mahesana Election Results 2019 Live Updates (Mehsana): Shardaben Anilbhai Patel of BJP Wins". News18. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "Gujarat set to send six women MPs to Lok Sabha | Ahmedabad News – Times of India". The Times of India. 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "Mehsana Lok Sabha Election Result 2019: BJP's Shardaben Anilbhai Patel takes the lead against Congress's A.J Patel". DNA India (in ஆங்கிலம்). 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "Former Industry Minister in then Modi led Gujarat govt Anil Patel passes away". DeshGujarat (in அமெரிக்க ஆங்கிலம்). 8 February 2018. பார்க்கப்பட்ட நாள் 23 April 2019.