சரோஜ் வசிஷ்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சரோஜ் வாசிஷ்ட் கதைசொல்லி, அனைத்திந்திந்திய வானொலியிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரி, மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர் எனப் பன்முகப்பரிமாணம் கொண்ட பெண்மணியாவார். திகார் சிறையில் கைதிகளுக்குக் கதை சொல்ல கிரண் பேடியிடம் அனுமதி கேட்டு வெளியிலிருந்து சென்று, சிறையிலிருந்த 1200 சிறுவர்களுக்குக் கதை சொல்லி அவர்களுக்கு அன்புள்ள தாய்மையின் வடிவாக இவர் மாறியதை கிரண் பேடி குறிப்பிட்டுள்ளார். வளரிளம் பருவத்தினர் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். 1993 ஆம் ஆண்டில் இவரது வயது 60. இவர் இல்லாமல் இருந்திருந்தால் சிறை வறுமையுற்றுப் போயிருக்கும் என்றும் சிறுவர் வார்டின் சிறுவர்கள் இவர் போகாமல் இருந்தால் கவலையுற்று பலமுறை விசாரிப்பார்கள் என்றும் இவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார்கள் என்றும் தமது நூலில் கிரண்பேடி குறிப்பிடுகிறார்.[1]

இவர் ’அது ஒன்றும் நிகழாதது போலிருந்தது’ என்ற தமது இந்தி நூலில் திகார் சிறையில் தாம் செய்த பணிகளின் கதைகளைக் கூறியுள்ளார்.

திகார் சிறை நூலகத்திற்குப் பல நூல்களை சேர்த்ததுடன், பல பதிப்பாளர்களையும் சிறை நூலகங்களுக்கு புத்தகங்களை நன்கொடையாக வழங்க வைக்க முயன்றார். தமது பணிகளுக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 சாதனைகள் எப்போதும் சாத்தியம்தான் (IT IS ALWAYS POSSIBLE) கிரண்பேடி ஐ.பி.எஸ்; கவிதா வெளியீடு; பக்கம் 276, 277, 322, 323, 324, 325

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரோஜ்_வசிஷ்ட்&oldid=2578266" இருந்து மீள்விக்கப்பட்டது