உள்ளடக்கத்துக்குச் செல்

சரோஜினி பாபர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரோஜினி பாபர்
கல்விஎம்.ஏ, முனைவர்
கல்வி நிலையம்மும்பை பல்கலைக்கழகம்
இணையதளம்
www.sarojinibabar.com

சரோஜினி பாபர் ( Sarojini Babar தேவநாகரி : सरोजिनी बाबर) (ஜனவரி 7, 1920 - ஏப்ரல் 20, 2008) ஒரு மராத்தி எழுத்தாளர் மற்றும் இந்தியாவின் மகாராஷ்டிராவைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார்.

1920 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் பாகனி நகரில் பாபர் பிறந்தார். இஸ்லாம்பூரில் உயர்நிலைப் பள்ளி படிப்பை முடித்த பின்னர் , புனேவில் உள்ள எஸ்.பி. கல்லூரியில் சேர்ந்தார், 1944 இல் மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர், மும்பை பல்கலைக்கழகத்தில் தனது முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களையும் பெற்றார்.

இவர் 1952–57 மற்றும் 1963-66 காலங்களில் மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் 1968–74 காலப்பகுதியில் இந்திய மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்தார்.

இலக்கியப் பணி[தொகு]

புதினங்கள்[தொகு]

  • கமலாச் ஜேல் (कमळाचं) (1946)
  • அஜிதா () (1953)
  • அதாவதி தேவதே சங்கதே (आठवतंय तेवढं सांगते) (1955)
  • சுயம்வர் (स्वयंवर) (1979)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரோஜினி_பாபர்&oldid=3132372" இலிருந்து மீள்விக்கப்பட்டது