சரண பாசவேஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சரண பாசவேஸ்வரர் கோயில் (Sharana Basaveshwara Temple) என்பது கர்நாடகத்தில் வடகிழக்குப் பகுதியல் உள்ள பழமையான நகரமான குல்பர்காவின் சரண என்ற பகுதியில் உள்ள ஒரு கோயிலாகும்.

வரலாறு[தொகு]

இந்தக் கோயில் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த லிங்காயத்துத் துறவியும், மெய்யியலரான ஸ்ரீ சரண பாசவேஸ்வரர் என்பவருக்குக் கட்டப்பட்டது. அவர் தனது தசோவா (வருவாயிலிருந்து ஈதல்) மற்றும் கயாகு (கர்மா கோட்பாட்டின் அடுத்த நிலை "நீங்கள் செய்ய வேண்டிய, வேலை உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது), 'உங்கள் கடமைக்கான பலனை எதிர்பார்க்க உங்களுக்கு உரிமை இல்லை' போன்ற மெய்யியல் கருத்துகளுக்காக அறியப்படுகிறார். இந்த கோவிலில் கர்பகுடி என்னும் கருவறையில் சரண பாசவேசுவரரின் சமாதி உள்ளது. இது ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளைக் கவரும் இடமாக உள்ளது.[1][2]

ஆண்டுவிழா மற்றும் தேர்த் திருவிழா[தொகு]

உள் நாட்டிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்வேறு மக்களும், கோயில் வளாகத்தில் நடக்கும் தேர்த் திருவிழாவைக் காணக் குவிகின்றனர். இச்சமயத்தில் பக்தர்கள் அந்தப் புனிதர் பயன்படுத்திய பிரசாத பட்டாலி என்னும் வெள்ளித் தட்டைக் காண இயலும். இந்தத் தட்டை ஆண்டுக்கு ஒருமுறை இத்திருவிழாவின்போது மட்டுமே கண இயலும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரசாதா பட்டாலியுடன், சரணாலயேசுவரர் பயன்படுத்திய சந்தனத்தால் செய்யப்பட்ட லிங்க சஜ்ஜிகே (லிங்கத்தை வைத்துக் கொள்ளும் உறை) என்னும் பொருளைக் காணலாம். இப்பகுதியில் உள்ள விவசாயிகள், கோயியில் பக்தர்களுக்கு அன்ன தானம் செய்வதற்காக தங்கள் அறுவடையிலிருந்து ஒரு பகுதியை நன்கொடையளிப்பதை தொடர்கின்றனர்.[3]

படங்கள்[தொகு]

குல்பர்கா சரண பாசவேஸ்வரர் கோயில்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sharana Basaveshwara". www.karnataka.com. 29 Oct 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Sharana Basaveshwara Temple, Gulbarga" (PDF). karnatakavarthe.org. 29 அக்டோபர் 2016 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 29 Oct 2016 அன்று பார்க்கப்பட்டது.
  3. "All set for Sharanabasaveshwar Temple jatra-car festival today". www.thehindu.com. 29 Oct 2016 அன்று பார்க்கப்பட்டது.