சயந்தன் தாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சயந்தன் தாசு (Sayantan Das) இந்தியாவைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீரர் ஆவார். 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். கொல்கத்தாவைச் சேர்ந்த இவர் 2008 ஆம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற உலக இளைஞர் சதுரங்க வெற்றியாளர் பட்டத்தை வென்றார்.[1] கொல்கத்தாவில் உள்ள குட்ரிக் தேசிய சதுரங்க அகாதமியில் சயந்தன் ஒரு மாணவராகப் பயிற்சி பெற்றார்.

தற்போதைய 10 வயதுக்குட்பட்ட சதுரங்க வீரர்களுக்கான போட்டியில் பட்டம் வென்ற ஆசிய வெற்றியாளரான திப்தயன் கோசும் குட்ரிக் தேசிய சதுரங்க அகாதமியில் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். வடக்கு கொல்கத்தாவில் உள்ள இசுக்காட்டிசு தேவாலயக் கல்லூரிப் பள்ளியில் சயந்தன் தாசு படித்தார்.[2]

பன்னாட்டு மாசுட்டர் சப்தரிசி ராய் சயந்தன் தாசுக்குப் பயிற்சி அளித்தார்.[3]

சயந்தன் தாசு 2014 ஆம் ஆண்டு எசுப்பானியாவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் தனது முதலாவது கிராண்டு மாசுட்டர் தகுதி நிலையை எட்டினார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sport / Chess : Warm reception for Sayantan Das". தி இந்து. 2008-11-04. 2012-11-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-05-18 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  2. "The Telegraph - Calcutta (Kolkata) | Sports | Sayantan gets top billing". Telegraphindia.com. 2009-12-01. 2010-05-18 அன்று பார்க்கப்பட்டது.
  3. Tags : kolakta, sports Posted: Fri 31 October 2008, 03:43 hrs (2008-10-31). "Young guns shine in youth Chess". Indianexpress.com. 2010-05-18 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: multiple names: authors list (link)
  4. "Sayantan Das earns maiden Grandmaster norm". The Times of India. http://timesofindia.indiatimes.com/sports/chess/Sayantan-Das-earns-maiden-Grandmaster-norm/articleshow/37788443.cms. பார்த்த நாள்: 8 July 2014. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சயந்தன்_தாசு&oldid=3337067" இருந்து மீள்விக்கப்பட்டது