உள்ளடக்கத்துக்குச் செல்

சமாதி புத்தர் சிலை, அனுராதபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொகுப்பு சமாதி புத்தர் சிலை.

சமாதி புத்தர் சிலை (Samadhi Statue) இலங்கையின் பண்டைத் தலைநகரமான அனுராதபுரத்தில் உள்ள மகாமேவ்நாவ பூங்காவில் உள்ளது.[1] இதில், புத்தரை அவர் முதலில் ஞானம் பெற்றதோடு தொடர்புடைய தியானநிலைத் தோற்றத்தில் சிலையாக வடித்துள்ளனர். இது நிர்வாண நிலை என்றும் அழைக்கப்படுகிறது. புத்தரின் ஞானம் பெற்ற நிலையே சமாதி என்று கூறப்படும் அனுபவமா அல்லது வேறேதாவது தோற்றப்பாடா என்பது புத்த மதத்தைக் கடைப்பிடிப்பவர்களது மெய்யியல் சார்புநிலையைப் பொறுத்துள்ளது. தியானத் தோற்றத்தில் புத்தர், காலை மடித்துச் சம்மண நிலையில், உள்ளங்கைகள் மேல்நோக்கியபடி ஒன்றன்மீது ஒன்றாக மடிமீது இருக்க அமர்ந்திருப்பார். புத்தரின் இந்தத் தோற்றம் பௌத்த உலகில் பரவலாக அறியப்பட்டது. எனவே இச்சிலை மிகவும் பொதுவாகக் காணப்படும் பௌத்த சிற்பங்களுள் ஒன்று எனலாம். கருங்கல்லில் செதுக்கப்பட்ட இச்சிலை 8 அடி உயரம் கொண்டது.[2]

மேற்கோள்கள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]