உள்ளடக்கத்துக்குச் செல்

சமப்பகுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமப்பகுப்பு (homolysis, கிரேக்கம்: ὅμοιος‎, "சமம்", λύσις: "தளர்வு") என்பது ஒரு மூலக்கூறின் வேதிப்பிணைப்பு சமாமகப் பிரிகையடைதலைக் குறிக்கிறது. இச்செயல்முறையில் பிளவுண்ட துண்டுகள் இரண்டும் முதலில் அசலாகப் பிணைக்கப்பட்டிருந்த எலக்ட்ரான்களில் ஒன்றை தக்கவைத்துக் கொள்கின்றன. இரட்டைப்படை எண்னிக்கையில் எலக்ட்ரான்களைக் கொண்ட நடுநிலையான ஒரு மூலக்கூறின் சமபகுப்பு வினையில் இரண்டு தனி உறுப்புகள் உற்பத்தியாகின்றன [1]. அதாவது, அசல் பிணைப்பில் உள்ள இரண்டு எலக்ட்ரான்களும் இரண்டு துண்டு இனங்களிலும் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. இச்செயல்முறையில் பங்கேற்கும் ஆற்றல் பிணைப்புப் பிரிகை ஆற்றல் என அழைக்கப்படுகிறது. பிணைப்புப் பிளவும் பல்லினப்பகுப்பு என்ற செயல்முறையினால் சாத்தியமாகும்.

ஏனெனில் இம்முறையில் பிணைப்புகளைப் பிளக்க அதிகமான ஆற்றல் தேவைப்படுகிறது. எனவே சமபகுப்பு பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிகழ்கின்றது.

  • புற ஊதா கதிர்வீச்சு (உதாரணம்: சூரிய ஒளியினால் தீப்புண்கள் உருவாதல்)
  • வெப்பம்.
  • பெராக்சைடின் O–O பிணைப்பு போன்ற மூலக்கூற்றிடை பிணைப்புகள் குறைந்த அளவு வெப்பத்தினால் சமப்பிளவு அடைவதற்கு வலிமையற்று இருக்கின்றன.
  • ஆக்சிசன் இல்லாத சூழலில் (வெப்பச் சிதைவு) கார்பன் சேர்மங்களின் சமப்பகுப்பு நீக்கல் உயர் வெப்பநிலையால் தூண்டப்படுகிறது [2].

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "homolysis (homolytic)". Compendium of Chemical Terminology Internet edition.
  2. I. Pastorova, "Cellulose Char Structure: a Combined Analytical Py-GC-MS, FTIR, and NMR Study", Carbohydrate Research, 262 (1994) 27-47.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமப்பகுப்பு&oldid=3304389" இலிருந்து மீள்விக்கப்பட்டது