சப்பம் அரி
சப்பம் அரி Sabbam Hari | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 2009–2014 | |
முன்னையவர் | பப்பால சலபதிராவ் |
பின்னவர் | முத்தம்செட்டி சீனிவாசராவு[1] |
தொகுதி | அனகாபல்லி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஆந்திரப் பிரதேசம் | 1 சூன் 1952
இறப்பு | 3 மே 2021 | (அகவை 68)
துணைவர் | இலட்சுமி |
பிள்ளைகள் | ஒரு மகன் : சப்பம் வெங்கட்டு மற்றும் இரன்டு மகள்கள் |
வாழிடம் | சீத்தமாதரா, விசாகப்பட்டினம் |
சப்பம் அரி (Sabbam Hari) இந்தியாவின் விசாகப்பட்டினம் நகரத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1952 ஆம் ஆண்டு சூன் மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். தகரபுவலசை அடுத்துள்ள சிட்டிவலசை இவரது சொந்த ஊராகும்.
சப்பம் அரி தற்செயலாக அரசியலில் நுழைந்தார். பின்னர் நகர இளைஞர் காங்கிரசு தலைவராக நியமிக்கப்பட்டார். நகர காங்கிரசு கட்சியில் தீவிரமாக இருந்த இவர், குறுகிய காலத்தில் அங்கீகாரம் பெற்றார். 15ஆவது மக்களவையில் இந்திய தேசியக் காங்கிரசு கட்சியின் சார்பில் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனகாபல்லி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். விசாகப்பட்டினத்தின் மேயராகவும் இவர் பணியாற்றினார். ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாமல் ஆட்சி செய்தார். விசாகப்பட்டினம் இவரது ஆட்சியில் சுகாதாரத்தை தனியார்மயமாக்கிய முதல் நகரமாக மாறியது.
வகித்த பொறுப்புகள்
[தொகு]- 15 ஆவது மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்
- தொழில்துறைக்கான நாடாளுமன்றக் குழு உறுப்பினர்
- விசாகப்பட்டின நகராட்சி ஆணையத்தின் மேயர்.
இறப்பு
[தொகு]2019 ஆம் ஆண்டு கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மே மாதம் 3 ஆம் தேதியன்று இறந்தார்.[2]