உள்ளடக்கத்துக்குச் செல்

சபர்ணா அருங்காட்சியகம், கொல்கத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சபர்ணா அருங்காட்சியகம், சபர்ணா சங்கரஹசாலா என்றழைக்கப்படுகின்ற, மேற்கு வங்காள மாநிலத்தில் கொல்கத்தா நகரில் உள்ள ஓர் அருங்காட்சியகமாகும். இந்த அருங்காட்சியகமானது சபர்ணா ராய் சவுத்ரி பரிபார் பரிஷத் நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்டது. ‘ மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் வரலாற்று மூலப்பொருட்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இது 2005 ஆம் ஆண்டில் இந்த அருங்காட்சியகம் நிறுவப்பட்டது.

சேகரிப்புகள்[தொகு]

இந்த அருங்காட்சியகம் அரிய கட்டுரைகள் மற்றும் வரலாற்று தெர்டர்பான வரலாற்று ஆவணங்களையும் காட்சிப்படுத்தியுள்ளது. இது கொல்கத்தாவில் உள்ள பாரிஷாவில் அமைந்துள்ளது. கொல்கத்தா மற்றும் சபர்ணா ராய் சவுத்ரி குடும்பம் ஆகியவற்றைக் குறித்து ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்களின் தேவைகளை இந்த நிறுவனம் பூர்த்தி செய்கிறது. இந்த குடும்ப அருங்காட்சியகத்தில் 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் இருந்து வந்த கபிலதிபத்ராக்கள் உள்ளிட்டோர் தொடர்பான மற்றும் பிறருடைய அரிய ஆவணங்கள் மற்றும் கட்டுரைகள் உள்ளன: 1794 தேதியிட்ட காவி ராம்பிரசாத் சென் கையொப்பம் இங்குள்ள ஒரு முக்கியமான ஆவணமாகும். இங்குள்ள பொருள்களில் 1840 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு பெரிய மண் அரிசிப்பானையும் அடங்கும். அந்தப் பானையானது 240 கிலோ தானியத்தை வைக்கும் அளவு திறன் கொண்டதாகும். 1878 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு உலோக ஹூக்கா, 1795 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு உலோக மெழுகுவர்த்தி வைக்கும் ஸ்டாண்ட், 1845 ஆம் ஆண்டைச் சேர்ந்த தேதியிட்ட அரைக்கும் கல் போன்றவையும் இங்கு உள்ளன. தபால்தலைகள் மற்றும் நாணயவியல் பிரிவுகளில் அரிய முத்திரைகள், அஞ்சலக முத்திரையின்முதல் நாள் கவர்கள் மற்றும் நாணயங்கள் உள்ளன.[1]

கொல்கத்தா பிறந்தநாள் வழக்கு தொடர்பாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் வரலாற்றுத் தீர்ப்பும், இது தொடர்பான நிபுணர் குழு அறிக்கையும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அந்த நீதிமன்றத் தீர்ப்பில் ஜாப் சார்னோக் கல்கத்தாவை (கொல்கத்தா) நிறுவியவர் அவர் அல்ல என்றும் ஆகஸ்ட் 24 கல்கத்தா நகரத்தின் பிறந்த நாள் அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது. சார்னோக்கின் வருகைக்கு முன்பு கொல்கத்தா ஒரு முக்கியமான வர்த்தக மற்றும் மதம் சார்ந்த மையமாக இருந்தது.[2][3][4]

நூலகம்[தொகு]

இந்த அருங்காட்சியகத்தில் அரிய நூல்கள் மற்றும் இதழ்களைக் கொண்ட அரிய நூல் பிரிவு உள்ளது. ஒரு புதிய மூல நூல்களுக்கான ஆவணக்காப்பகமும், டிஜிட்டல் நூலகமும் உள்ளன. கொல்கத்தாவில் இவ்வாறான அமைப்பினைக் கொண்ட முதல் நூலகம் இதுவாகும். மேலும் பொதுமக்கள் இதனை இலவசமாகப் பயன்படுத்தப்படலாம். இங்கு கொல்கத்தா, முகலாய சகாப்தம் மற்றும் சபர்ணா ராய் சவுத்ரி குடும்பத்தின் வரலாற்றோடு தொடர்புடைய ஆவணங்களுடன் உலகெங்கிலும் உள்ள வரலாறு தொடர்பான அரிய நூல்கள், பயணக் குறிப்புகள், இதழ்கள் மற்றும் கருத்தரங்கக் கட்டுரைகள் உள்ளன.[5]

வெளியீடுகள்[தொகு]

மன்னா பப்ளிகேஷனுடன் இணைந்து இந்த அருங்காட்சியகம் வெளியீடுகளை பதிப்பிப்பதில் ஈடுபட்டுள்ளது. சபர்ணா பார்தா என்ற டாப்ளாய்ட் வடிவிலான இதழ் ஒவ்வோராண்டும் துர்கா பூஜையின்போது வெளியிடப்படுகிறது. பரிஷத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற புதிய ஆய்வுகள் உள்ளிட்ட பல செய்திகள் அதில் காணப்படும்.

அண்மையில் இரண்டு புதிய ஆராய்ச்சி நூல்கள்வெளியிடப்பட்டன. ஒன்று டாக்டர் சோனாலி முகோபாத்யாய் (முகர்ஜி) எழுதிய பங்களா சோட்டோகல்பர் அச்சேனா மஹால் (ஐ.எஸ்.பி.என் எண் 81-87648-58-9), மற்றொன்று கதா (ஐ.எஸ்.பி.என் எண் 81-87648-57-0) என்ற, தேவர்ஷி ராய் சவுத்ரி எழுதிய ஒரு தனித்துவமான வினாடி வினா நூலாகும். மேலும் பபானி ராய் சவுத்ரி எழுதிய பாங்கியா சபர்ணா கதா / கலிஷேத்ரா காளிகாதாவின் புதிய திருத்தப்பட்ட மற்றும் விரிவாக்கப்பட்ட பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச வரலாறு மற்றும் பாரம்பரிய கண்காட்சி[தொகு]

இந்த அருங்காட்சியகம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் ஒரு சர்வதேச வரலாறு மற்றும் பாரம்பரிய கண்காட்சியை நடத்தஏற்பாடு செய்கிறது. கருத்தரங்குகள், கலாச்சார நிகழ்வுகள் மற்றும் திறந்த வினாடி வினா ஆகியவையும் நான்கு நாள் வருடாந்திர திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த கண்காட்சிளானது இந்தியாவின் அண்டை நாடு ஒன்றை மையப்படுத்தியதாக அமையும். அந்நாடுகளின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் இந்தியாவுடனான பாரம்பரிய உறவுகள் மற்றும் இந்தியாவுக்கும் இந்த நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியவற்றை வெளிப்படுத்த இது உதவுகிறது. 2014 ஆம் ஆண்டில் பங்களாதேஷ், 2015 இல் பூட்டான், 2016 ஆம் ஆண்டில் இலங்கை, 2017 ஆம் ஆண்டில் நேபாளம் என்ற நிலையில் அண்டை நாடுகள் கண்காட்சியின் மையப்பொருளாக அமைந்தது. நேபாள நாட்டு இணைவாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் நேபாள துணைத் தூதரகத்தின் எக்நாராயண் ஆர்யல் கலந்து கொண்டார்.[6] . இந்தியாவும் தாய்லாந்தும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வரலாறு மற்றும் கலாச்சார உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. சர்வதேச கண்காட்சியின் 2018 ஆண்டு பதிப்பில் தாய்லாந்து [7]

சப்தர்ஷி என்ற பாரம்பரிய குடும்பம் கையெழுத்து இதழ் சர்வதேச வரலாறு மற்றும் பாரம்பரிய கண்காட்சியின் போது வெளியிடப்படுகிறது. தற்போது இந்த பாரம்பரிய இதழி தொகுப்பாசிரியர்களாக தீபக் குமார் ராய் சவுத்ரி மற்றும் தேவர்ஷி ராய் சவுத்ரி ஆகியோர் உள்ளனர்.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-10-30. பார்க்கப்பட்ட நாள் 2019-10-30.
  2. Bangiya Sabarna Katha Kalishetra Kalikatah by Bhabani Roy Choudhury, Manna Publication.
  3. http://news.bbc.co.uk/2/hi/south_asia/3034419.stm
  4. http://indiankanoon.org/doc/782056/?type=print
  5. http://epaper.thestatesman.com/555313/The-Statesman-Kolkata/1st-August-2015#page/15/2
  6. http://www.millenniumpost.in/kolkata/news-181388
  7. http://www.khaboronline.com/more/culture/program/international-history-and-heritage-exhibition-organised-sabarna-roychowdhury-paribar-parishad-inaugurated/