உள்ளடக்கத்துக்குச் செல்

சன்னி இயக்கும

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகா கொல முகமூடி

சன்னி இயக்கும (Sanni Yakuma, சிங்களம்: සන්නි යකුම, சன்னி யக்கும[1]) சில நேரங்களில் தஹஅட்ட சன்னிய (දහඅට සන්නිය, பதினெட்டாவது சன்னி) என்று அழைக்கப்படுவது ஒரு பாரம்பரிய சிங்களவர்களின் ஒரு பாரம்பரிய பேயோட்டுதல் சடங்கு ஆகும். இந்த சடங்கு 18 வகையான முகமூடி அணிந்த நடனங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் மனிதர்களைப் பாதிக்கும் ஒரு குறிப்பிட்ட நோயினை சித்தரிக்கிறது. இந்த 18 நடனங்கள் பஹாரதாவின் முக்கிய நடனங்கள், அல்லது கீழ்ப்புற நாட்டின் நடனம் அல்லது இது இலங்கையின் மூன்று முக்கிய நடன வடிவங்களில் ஒன்றாகும்.[2][3] இந்த சடங்கானது. மனிதர்களைத் தாக்கியுள்ள அரக்கர்களை அழைத்து மனிதர்களைத் தொந்தரவு செய்யாமல் அழிந்து போக வேண்டுவதாகும்.[1]

தோற்றம்

[தொகு]

நோய்கள் மனிதர்களுக்கு பேய்களால் கொண்டுவரப்பட்டன என்றும் இந்த நம்பிக்கைகள் மற்றும் சடங்குகள் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் தனது மூலத்தைக் கொண்டிருக்கக்கூடும் என்றும் நம்பப்பட்டது.[4][5] நாட்டுப்புறக் கதைகளின்படி, சன்னி யக்குமவில் சித்தரிக்கப்பட்டுள்ள 18 பேய்கள் புத்தர் காலத்தில் தோன்றியதாக நம்பப்படுகின்றன. இருப்பினும், இந்தக் கதை பல புத்த மத ஆதாரங்களில் வித்தியாசமாகக் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் புத்தர் ரத்தன சூட்டாவின் முழக்கத்தின் மூலம் நகரத்தை ஒரு கொள்ளை நோயில் இருந்து காப்பாற்றுவதை விவரிக்கிறது. வைசாலி நகரத்தில் புத்தரின் வருகை என்ற கதையில் லிச்சாவியின் அரசன் தனது அரசி கள்ளத்தொடர்பு கொண்டிருந்ததாக சந்தேகித்து அவளைக் கொன்று விடுகிறான். இருப்பினும், அவளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் போது ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அந்த குழந்தை பிணத்திடமிருந்து பால் அருந்தி உயிர் பெற்ற "கொல சன்னியா" என்ற பெயருடன் அரக்கனாக வந்து தனது தந்தையின் செயலுக்குப் பழி தீர்க்கும் விதமாக நகரையே அழிக்கிறான்.[6] கோல சன்னியா 19 நச்சுகளை வசீகரித்து 18 அரக்கர்களாக மாற்றி தன்னோடு சேர்ந்து நகரத்தை அழிக்க பயன்படுத்திக் கொள்கிறான்.[7] 18 அரக்கர்களும் அரசனைக் கொன்றதோடு, நகரையே கைப்பற்றி தினமும் ஆயிரக்கணக்கானோரைக் கொன்று தின்றனர். இறுதியில், புத்தர் அவர்களை அடக்கி மக்களை இனி கொல்லக்கூடாது என்ற உறுதியைப் பெற்றார்.[8]

இந்த 18 அரக்கர்களில் ஒவ்வொருவரும் மனிதர்களில் 18 விதமான பிணிகளைத் தோற்றுவிப்பதாக நம்பப்படுகிறது.[9] சன்னி யாகுமா சடங்கானது, அந்த அரக்கர்களை அழைத்து, கட்டுப்படுத்தி, அரக்கர் உலகத்திற்கு வெளியேற்றுவதாக நம்பப்படுகிறது.[8] இந்தச் சடங்கு முறையானது, எப்பொழுது தொடங்கியது என்பது அறியப்படாமல் இருந்தாலும், நாட்டின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் இது மிகப் பழங்காலத்தில் இருந்தே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.[10]

சடங்கின் முறை

[தொகு]

இந்த சடங்கின் பெயரானது, முறையே "நோய்" மற்றும் "அரக்க சடங்கு" ஆகிய பொருளைத் தரக்கூடிய சிங்கள வார்த்தைகளான "சன்னிய" மற்றும் "யாக்குமா" ஆகியவற்றிலிருந்து உருவானது.[9] இலங்கை கலாச்சாரத்தில், பேயை ஓட்டுதல் என்பது டோவில் என்றழைக்கப்படுகிறது. நாட்டில் உள்ள நன்கறியப்பட்ட பேய் ஓட்டும் முறையாக சன்னி யாக்குமா விளங்குகிறது. [11]

இந்த சடங்கானது ஆவிகளோடு தொடர்புடைய மரபு சார்ந்த நம்பிக்கைகளை புத்த மதத்தோடு ஒருங்கிணைத்ததாக உள்ளது.[12][13] குணப்படுத்துதம் சடங்கைத் தொடங்குவதற்கு முன்னதாக, யகாடுரா என்றழைக்கப்படும் முதன்மை நபர் நோயாளியானவர் அரக்கனால் அல்லது தீய ஆவியால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்று அறிவார். பின்னர் சடங்கிற்கான பொருத்தமானநாள் மற்றும் நேரம் (வழக்கமாக விடியலிலிருந்து பொழுது சாயும் வரை) குறிக்கப்படும்).[14] எடுரா அல்லது யகாடுரா ஒரு மீனவராகவோ, மேளமடிப்பவராகவோ, விவசாயியாகவோ உள்ள மரபு சார்ந்த குணப்படுத்துபவர் ஆவார்.[5][15] இந்தச் சடங்கானது இரண்டு படிநிலைகளைக் கொண்டது ஆகும். அவை அட பாலயா மற்றும் டாகா அடா சன்னிய என்பவை ஆகும்.[16] நடனக்காரர்கள் வண்ணமிகு அடவைக் கட்டிக் கொண்டும் முகமூடிகள் அணிந்தும் இருப்பர். இவர்கள் தாளமிகு மேள தாளத்திற்கேற்றவாறு சுழன்று, சுழன்று நடனமிடுவர்.[17] மேளதாளம் அடிப்பவருக்கும் பேய் பிடித்தவருக்கும் இடையேயான உரையாடல்கள் சில நேரம் நகைச்சுவையோடும், வேறு சில சமயங்களில் கீழ்த்தரமானதாகவும் அமையும். இந்த உரையாடலின் காரணமாக பேயானது தரம் தாழ்த்தப்படுகிறது.[16][18]

மேற்கோள்கள்

[தொகு]
  1. மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள், சி. மௌனகுரு, 1998
  2. "Traditional Dances of Sri Lanka". Info.lk. Archived from the original on 2010-01-11. பார்க்கப்பட்ட நாள் 2009-09-21.
  3. The Last of the Devil Dancers
  4. Hussein, Asiff. "Pallemalala discovery throws new light on Lanka's pre-historic culture". The Sunday Observer. http://www.lankalibrary.com/geo/palle1.html. பார்த்த நாள்: 2015-12-05. 
  5. 5.0 5.1 Pate, Alan. "The yakun natima - devil dance ritual of Sri Lanka". lankalibrary. http://www.lankalibrary.com/rit/yakun%20natuma.html. பார்த்த நாள்: 2015-12-05. [தொடர்பிழந்த இணைப்பு]
  6. Schechner and Appel (1990), p. 126
  7. Obeyesekere (1990), p. 191
  8. 8.0 8.1 Obeyesekere (1990), p. 192
  9. 9.0 9.1 Claus, Diamond and Mills (2003), p. 133
  10. Seneviratne, Vidushi (2003-02-16). "A burst of Daha Ata Sanniya". The Sunday Times. http://sundaytimes.lk/030216/plus/12.html. பார்த்த நாள்: 2009-09-21. 
  11. Bailey, Mark S; de Silva; H Janaka (2006-12-23). "Sri Lankan sanni masks: an ancient classification of disease". BMJ. பார்க்கப்பட்ட நாள் 2009-09-21.
  12. Schechner and Appel (1990), p. 124
  13. Macdonald and Fyfe (1996), p. 38
  14. Gunasekara, Naomi (2002-09-22). "Unmasking a craft". The Sunday Times. http://sundaytimes.lk/020922/plus/10.html. பார்த்த நாள்: 2009-09-21. 
  15. "18 masks, 18 illnesses – and the master of them all". kulturhistorisk museum இம் மூலத்தில் இருந்து 2019-05-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190502143719/https://www.khm.uio.no/tema/utstillingsarkiv/masker/english/sanni_18_masker.html. பார்த்த நாள்: 2015-12-05. 
  16. 16.0 16.1 Moore and Myerhoff (1977), p. 108
  17. Moore and Myerhoff (1977), p. 102
  18. Moore and Myerhoff (1977), p. 109

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்னி_இயக்கும&oldid=3346954" இலிருந்து மீள்விக்கப்பட்டது