சத்தீசா இராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சத்தீசா இராய் (Satheesha Rai) என்பவர் ஓர் இந்திய பாரம் தூக்கும் ஒலிம்பிக் ஆண் விளையாட்டு வீர்ர் ஆவார். கர்நாடக மாநிலம் மங்களுர் இவருடைய சொந்த ஊராகும். 1999 ஆம் ஆண்டு இராய்க்கு அருச்சுனா விருது வழங்கப்பட்டது. மலேசியாவில் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று ஒரு தங்கப் பதக்கமும் இரண்டு வெள்ளிப் பதங்கங்களும் பெற்றார் [1][2]. 2002 ஆம் ஆண்டு மான்செசுட்டரில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளிலும் இரண்டு தங்கப் பதக்கங்களும் ஒரு வெண்கலப் பதக்கமும் வென்றார். ஆனால் தடை செய்யப்பட்ட உணவை உட்கொண்டார் என்ற காரணத்திற்காக பதக்கங்கள் பறிக்கப்பட்டன. ஆசிய விளையாட்டுப் போட்டிகள், பொதுநலவாய போட்டிகள், ஆசிய பளு தூக்கும் சாம்பியன் பட்டப் போட்டி மற்றும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட 16 அனைத்துலகப் போட்டிகளில் நான் பங்கேற்றிருக்கிறேன். அந்தப் போட்டிகளில் கூட மருத்துவப் பரிசோதனைகள் அவசியமானவையாகும். அங்கெல்லாம் நான் சோதனைகளில் வெற்றி பெற்றேன். மான்செசுட்டருக்குப் புறப்படுவதற்கு முன்பு கூட இந்திய விளையாட்டு ஆணையம் என்னை மூன்று முறை பரிசோதனை செய்தது[3]. ஆனால் எனக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது என்று இராய் தண்டனையைக் குறித்து அப்பொது கருத்து தெரிவித்தார்[4].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தீசா_இராய்&oldid=2727497" இருந்து மீள்விக்கப்பட்டது