சதார் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சதார் தீவு

சதார் தீவு (Sathar Island;மலையாளம்:സത്താർ ഐലന്റ്) இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில் பாயும் பெரியார் ஆற்றின் கிளை நதி ஒன்றில் அமைந்துள்ளது [1][2]. இத்தீவின் நிலப்பரப்பு 156 ஏக்கர்கள் பரப்பளவும் 2 கிலோமீட்டர் நீளமும் கொண்டதாக அமைந்துள்ளது. 500 நபர்களுக்கும் குறைவான மக்களே இங்கு வசிக்கின்றனர். சதார் தீவுப்பாலம் மூலமாக இத்தீவு முக்கிய நிலப்பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பாலத்திலிருந்து சதார் தீவின் தோற்றம்

வரலாறு[தொகு]

1800 ஆம் ஆண்டின் மத்திய பகுதியில் சதாரர் தீவு உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இத்தீவின் அசல் நிலப்பகுதியானது மிகவும் சிறியது ஆகும். மற்றும் முக்கிய நிலப்பகுதியானது மனிதனால் உருவாக்கப்பட்ட பகுதியாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Servcie, Express News (March 25, 2016). "Verdict on sale of Sathar island set aside". பார்த்த நாள் March 25, 2016.
  2. "Sathar Island". OneFiveNine. பார்த்த நாள் March 25, 2016.

மேலும் படிக்க[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சதார்_தீவு&oldid=2401052" இருந்து மீள்விக்கப்பட்டது