சதாப் மன்சில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சதாப் மன்சில் (Sadaf Manzil) என்பது இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலம் மும்பை மாநகராட்சி நாக்பாடா நகரத்தில் உள்ள நான்கு மாடி குடியிருப்பு கட்டிடத்தின் பெயர் ஆகும். இக்கட்டிடம் 2005 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 23 ஆம் தேதி அன்று இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி 11 குடியிருப்பாளர்கள் இறந்தனர் மற்றும் 24 பேர் காயமடைந்தனர். இக்கட்டிடம் 100 ஆண்டுகள் பழமையான கட்டிடம் ஆகும். இருவர் அடங்கிய குழு இச்சரிவை ஆய்வு மேற்கொண்டது. இச்சரிவுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு 2008 ஆம் ஆண்டு பொறியாளர்கள் அலட்சியம் காரணமாககுற்றச்சாட்டுகளுக்கு தண்டனை பெற்றனர். ஒவ்வொருவருக்கும் நான்கரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. [1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சதாப்_மன்சில்&oldid=3737563" இலிருந்து மீள்விக்கப்பட்டது