சட்டவாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சட்டவாக்கம் (Legislation) என்பது சட்டமியற்றகத்தாலோ, அத்தகைய அதிகாரம் பெற்ற அமைப்பினாலோ சட்டமாக இயற்றுகின்ற/உருவாக்குகின்ற செயல்முறை எனலாம்[1]. ஆங்கிலத்தில் லெஜிஸ்லேஷன் என்று அழைக்கப்படும் இது எழுத்துருச் சட்டத்தை குறிக்கவும் பயன்படுத்தப்படுவதுண்டு. மசோதா சட்டவாக்கத்தின் மூலம் சட்டம் ஆகும். ஒன்றைக் கட்டுப்படுத்தவும், ஒன்றிற்கு அதிகாரமளிக்கவும், நிதி ஒதுக்கவும், அனுமதிக்கவும், அறிக்கை வெளியிடவும், தடை செய்யவும் சட்டவாக்கம் பயன்படும். சட்டவாக்கம் சட்டமியற்றக செய்யுளால் அதிகாரப்படுத்தியதின் கீழோ சட்டமியற்றக செய்யுளை நடப்பிலாக்க வேண்டி ஓர் ஆட்சியகமோ (Executive) நிர்வாக அமைப்போ ஏற்படுத்துகின்ற சட்டமியற்றக செய்யுள் அல்லாத ஒன்றாகவும் இருக்கலாம்[2].

மேற்கத்திய அமைச்சக முறையின் படி ஒரு குறிப்பிட்ட முதன்மை சட்டவாக்கம் இயற்றப்பட்டப்ப பின் நாடாளுமன்றச் சட்டம் என அறியப்படும். சாதாரணமாக, சட்டவாக்கம் சட்டமியற்றக உறுப்பினரால், அல்லது ஆட்சியகத்தால் பரிந்துரைக்கப்பட்டு, இது ஏற்றுக்கொள்வதற்கு முன் சட்டமியற்றக உறுப்பினர்களின் வாதத்திற்கு உட்படுத்தப்படவும், தேவைப்பட்டால் திருத்ததிற்கு உள்ளாவதும் உண்டு. மிகப்பெரும்பாலான சட்டமியற்றகங்களிலும் கூட்டுத்தொடரில் பரிந்துரைக்கப்படுவதில் குறைவானவை மட்டுமே இயற்றப்படுகின்றன. அரசினால் கொண்டுவரப்படும் மசோதாக்களுக்கே பொதுவாக கூடுதல் முன்னுரிமைத் தரப்படுகிறது. சட்டவாக்கம் அரசின் மூன்று முக்கிய பணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது, இது அதிகார பகிர்வு கோட்பாட்டின் கீழ் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது. சட்டவாக்க அதிகாரம் படைத்தவர்கள் முறைப்படி சட்டமியற்றகர்கள் என அறியப்படுகின்றனர், அரசின் நீதியக கிளைக்கே சட்டவாக்கத்தை பொருள்விளக்கி கூற அதிகாரம் உள்ளது (எழுத்துருச் சட்டங்களின் பொருள்விளக்கம் காண்க), அரசின் ஆட்சியக கிளைக்கு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்புக்குள் இருந்தே செயல்பட முடியும்.

சட்டவாக்க அடித்துவகள்[தொகு]

சட்ட உருவாக்கத்தின் போதும் அதற்கு முன்பும் சட்டமியற்றுகின்றவர் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான காரியங்கள் ஆகும் சட்டவாக்க அடித்துவங்கள் (Principles of legislation). முக்கியமாக நான்கு அடித்துவங்கள் சட்டவாக்கத்தின் போது பயன்படுத்தப்படுகின்றன. அவை (i) வலிக்கும் இன்பத்திற்குமான தேற்றம், (ii) துறவியத் கோட்பாடு, (iii) தன்னிச்சை கோட்பாடு மற்றும் (iv) அறவிய கோட்பாடு

பெந்தாமின் பயனுடைமைத்துவ தேற்றம்[தொகு]

அறியப்படுகிற ஆங்கில சட்டவியலாளரும் சட்ட சீர்திருத்த வாதியுமான ஜெறிமி பெந்தாம் (Jeremy Bentham_1748-1834) தன்னுடைய சட்டவாக்க தேற்றம் (Theory of legislation) மற்றும் அறத்திற்கும் சட்டவாக்கத்திற்குமான அடித்துவங்கள் (Principles of Morals and Legislations) எனும் நூட்களில் சட்டமியற்றிகள் சட்ட உருவாக்கத்தின் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய அடிப்படையான அடித்துவங்களை எடுத்துரைத்துள்ளார்.

பெந்தாமின் கூற்றின்படி

  • சட்டவாக்கம் என்ற சட்ட உருவாக்க கலை மனித இயல்பை பொறுத்து ஓர் அறிவியலாகும்.
  • சட்டவாக்கத்தின் சரியான நோக்கம் என்பது பயனுடைமை அடித்துவத்தை எடுத்துச்செல்வதாகும். சட்டத்தின் முறையான இறுதியாக்கம் அதியாய எண்ணிக்கைக்கு அதியாய மகிழ்ச்சி (salus popule supreme lex) என்றாக இருக்கவேண்டும்.
  • மேலும் பெந்தாம், ஒவ்வொரு நபரும் தன்னுடைய மகிழ்ச்சியை தீர்மானிப்பதில் சிறந்தவர்கள் ஆவர், ஆகையால் சட்டவாக்கம் முடிந்தவரை தனிமனித தன்னுரிமை மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் களைவதாக இருக்வேண்டும், என்றும் தனிமனிதன் தன்னுடைய தனி விருப்பபடி அதற்கு ஒப்பான அடுத்தவரின் தனிவிருப்பத்தை பாதிக்காத அளவிற்கு கண்டிப்பாக நடந்துக்கொள்ளலாம் என்றும் கருதுகிறார்.

பெந்தாமின் பயனுடைமைத்துவ தேற்றம் மேலும் இன்பத்திற்கான தேற்றம் (Hedonic Theory), பயனுடைமைக்கான அடித்துவங்கள் (Principles of Utility) மற்றும் வலிக்கும் இன்பத்திற்குமான தேற்றம் (Pain and Pleasure Theory) என்றும் அறியப்படுகிறது. பெந்தாமின் பார்வையில்: இங்கு பயனுடைமை அதாவது யூட்டிலிட்டி (utility) என்பது நன்மையை சிலவற்றை கொண்டுவருவதற்கும் தின்மை சிலவற்றை தவிர்ப்பதற்கும் வேண்டியுள்ள சிந்திப்பு திறனை குறிக்கிறது. இந்த யூட்டிலிட்டி என்றச் சொல் லத்தீன் சொல்லான யூட்டிலிஸ் என்பதில் இருந்து வந்ததாகும், இதன் பொருள் பயனுள்ள என்பதாகும். பெந்தாமின் பார்வையில்: "இயற்கை வலி இன்பம் எனும் இரண்டு இறைமாட்சி அடையாளங்களின் ஆளுமையின் கீழ் மனிதரின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது". ஒரு செய்கை (ஒரு சட்டமென்று எடுத்துக்கொள்வோம்) சரியானதா அல்லது தவறானதா என்று தீர்மானிப்பது அது எந்தளவுக்கு பயனுடையது என்பதை வைத்தாகும், அதாவது எந்தளவுக்கு இன்பத்தை/நன்மையை ஏற்படுத்துகிறது என்பதிலிருந்தாகும். பெந்தாம் கூறுகின்றார்: "ஒரு செய்கை சரியானது என்றால் அது அதிக நன்மையை அதிக ஜனங்களுக்கு உருவாக்க வேண்டும்". அதாவது, சட்டம் ஒன்று அதிகப்படியான நன்மையை அதிகப்படியான ஜனங்களுக்கு தருவதே உயரிய சட்டமாகும் என்பதாகும். கேரள சட்டப் பேரவையின் சட்டவாக்கமான "கேரள நில சீர்திருத்த செய்யுள்" இதற்கு சிறந்த எடுத்துகாட்டாகும்.

மேற்கோள்[தொகு]

  1. பார்க்கவும் Article 289(3) of the Treaty on the functioning of the European Union
  2. Wim Voermans
"https://ta.wikipedia.org/w/index.php?title=சட்டவாக்கம்&oldid=3290934" இலிருந்து மீள்விக்கப்பட்டது