சட்டப் பரபரப்புப் புனைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சட்டப் பரபரப்புப் புனைவு (Legal thriller) என்பது ஒரு வகைப் புனைவுப் பாணி. குற்றப் புனைவு மற்றும் பரபரப்புப் புனைவு பாணிகளின் உட்பிரிவாக உள்ளது. இவ்வகைப் படைப்புகள் வழக்கறிஞர்கள், நீதியரசர்கள் போன்ற சட்டம் சார் நபர்களை மையக் கதைமாந்தராகக் கொண்டுள்ளன. சட்டம்-நீதி அமைப்பும் சமூகத்துடனான அதன் உறவும் இவற்றில் மையக்கருத்துகளாக அமைகின்றன. ”தவறாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்றப் போராடும் வழக்கறிஞர்கள்” எனும் கதை முடிச்சே இவ்வகைப் படைப்புகளில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. ரிச்சர்ட் நார்த் பாட்டர்சன், ஜான் கிரிஷாம், இயர்ல் ஸ்டான்லி கார்டனர், மைக்கேல் கானலி ஆகியோர் இவ்வகைப் புனைவுப் பாணியில் எழுதும் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் சிலர்.