சடையவர்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சடையவர்மன் என்னும் பெயரிலுள்ள கட்டுரைகள்

பாண்டிய மன்னர்கள்[தொகு]

  1. சடையவர்மன் சீவல்லபன் - கி.பி. 1132 முதல் 1162 வரை பாண்டிய நாட்டில் ஆண்ட மன்னனாவான். சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கன் காலத்தவன்.
  2. சடையவர்மன் பராந்தக பாண்டியன் - கி.பி. 1150 முதல் 1162 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். முதலாம் குலோத்துங்கனின் மகனான விக்கிரம சோழன் காலத்தைச் சேர்ந்தவன்.
  3. சடையவர்மன் குலசேகர பாண்டியன் - கி.பி. 1162 முதல் 1175 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான்.சீவல்லப பாண்டியனின் மகன்.
  4. சடையவர்மன் வீரபாண்டியன் - கி.பி. 1175 முதல் 1180 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். முதலாம் பராக்கிரம பாண்டியனின் மகன்.
  5. முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் - கி.பி. 1251-1271 - பல மன்னர்களை வென்று தென்னிந்தியாவின் தெற்குப்பகுதிகளையும் இலங்கை வடக்குப்பகுதிகளையும் ஆண்டவன்.
  6. இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் - கி.பி. 1276-1293 - முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சிக்குத் துணையிருந்த இம்மன்னன் கருவூரினைத் தலைநகராகக்கொண்டு கொங்கு நாட்டில் ஆட்சி புரிந்தவன்.
  7. சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் - கி.பி. 1422 முதல் 1463 வரை தென்காசியை தலைநகராக கொண்டு பாண்டிய நாட்டை ஆட்சி செய்த மன்னனாவான்.
  8. சடையவர்மன் சீவல்லப பாண்டியன் - கி.பி. 1534 முதல் 1543 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். ஆகவராமனின் மகன்.
  9. சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் - கி.பி. 1564 முதல் 1604 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். நெல்வேலி மாறனின் முதலாம் மகனாவான்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சடையவர்மன்&oldid=1540928" இலிருந்து மீள்விக்கப்பட்டது