சஞ்சீவ் துராந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சஞ்சீவ் துராந்தர்
Sanjeev Dhurandhar
தேசியம்இந்தியர்
துறைவானியற்பியல்
பணியிடங்கள்பல்கலைக்கழகங்களுக்கான வானியல், வானியற்பியல் மையம்

சஞ்சீவ் துராந்தர் (Sanjeev Dhurandhar) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்திலுள்ள புனே நகரில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களுக்கான வானியல், வானியற்பியல் மையத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இவரது ஆராய்ச்சி ஆர்வம் ஈர்ப்பு அலைகளைக் கண்டறிதல் மற்றும் கவனித்தல் பிரிவுகளாகும்.[1] ஈர்ப்பு அலைகளை கண்டறிய பங்களித்த இந்திய அணியின் ஓர் அங்கத்தினராக துராந்தர் இருந்தார்.[2][3][4] இண்டிகோ கூட்டமைப்பு மன்றத்தின் அறிவியல் ஆலோசகராகவும் இவர் உள்ளார்.[5]

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கான எச் கே பிரோதியா விருது 2016 ஆம் ஆண்டு துராந்தருக்கு வழங்கப்பட்டது.[6]

2020 ஆம் ஆண்டு இயற்பியல் துறையில் இவரது பங்களிப்புகளை சிறப்பிக்கும் விதமாக அமெரிக்க இயற்பியல் கழகத்தின் உறுப்பினராகத் துராந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் பணிபுரியும் விஞ்ஞானிகளுக்கு அரிதாக இத்தகைய சிறப்பு கிடைக்கிறது.[7]

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சீவ்_துராந்தர்&oldid=3155206" இருந்து மீள்விக்கப்பட்டது