சஞ்சார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சஞ்சார் செய்தித்தாள்
Sanchar
மொழிமராத்தி
நாடுஇந்தியா
நகரம்சோலாப்பூர்

சஞ்சார் (Sanchar) என்பது மராத்தி மொழியில் வெளிவரும் ஒரு தினசரி அகல விரிதாள் செய்தித்தாளாகும். இது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்திலுள்ள சோலாப்பூர் நகரத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவருகிறது. 1961 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சிறீ எம் பி கதாதி இரங்கா வைத்யா மற்றும் இராமன் காந்தி ஆகியோர் இச்செய்தித்தாளை தொடங்கினர். தற்போது சங்கம் பேப்பர் நிறுவனத்திற்கு இது சொந்தமானதாக உள்ளது. தர்மராசு அன்னராச் கதாதி என்பவர் சஞ்சாரின் தற்போதைய ஆசிரியர், அச்சிடுபவர் வெளியீட்டாளர் என செயல்படுகிறார். இவருடன் திருமதி சுசிலா ராமன் காந்தி சங்கம் பேப்பர் நிறுவனத்தின் பங்குதாரராக உள்ளார். சஞ்சார் தினசரியின் அலுவலகம் இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்திலுள்ள சோலாப்பூர் ஆட்கி சாலையிலுள்ள சஞ்சார் கட்டிடத்தில் உள்ளது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sanchar Marathi News Paper". ePapersHunt. Archived from the original on 25 ஜூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 12 Jul 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சார்&oldid=3552674" இலிருந்து மீள்விக்கப்பட்டது