சஞ்சல்குடா மத்திய சிறை

ஆள்கூறுகள்: 17°21′57″N 78°30′00″E / 17.365742°N 78.500068°E / 17.365742; 78.500068
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Chanchalguda Central Jail
இடம்ஐதராபாத்து, இந்தியா
அமைவு17°21′57″N 78°30′00″E / 17.365742°N 78.500068°E / 17.365742; 78.500068
நிலைசெயல்படுகிறது
பாதுகாப்பு வரையறைஅதிகபட்சம்
கொள்ளளவு1000
திறக்கப்பட்ட ஆண்டு1876
முந்தைய பெயர்{{{former_name}}}

சஞ்சல்குடா மத்திய சிறை (Chanchalguda Central Jail) இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அமைந்துள்ளது. இந்திய நாட்டின் பழமையான சிறைகளில் சஞ்சல்குடா மத்திய சிறையும் ஒன்றாகும்.[1] ஐதராபாத்தில் உள்ள பழைய நகரமான சஞ்சல்குடாவில் இச்சிறை உள்ளது. ஐதராபாத் நிசாமின் ஆட்சியின் போது தலைமை கட்டிடக் கலைஞர் நவாப் கான் பகதூர் மிர்சா அக்பர் பெய்க் என்பவரால் கட்டப்பட்டது.[2] இன்றும் சிறை செயல்பாட்டில் உள்ளது.

சஞ்சல்குடா சிறைச்சாலையில் 1000 கைதிகளை சிறைவைக்கும் வசதி உள்ளது. ஆனால் சமீபத்தில் 1600 கைதிகளை சிறை வைத்து நெரிசல் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. தினமும் சராசரியாக 40 புதிய கைதிகள் சிறைக்கு வருகிறார்கள்.[3] 2012 ஆம் ஆண்டில் புனரமைப்பு வசதிகளை மேம்படுத்துதலும் சிறையின் ஆக்கிரமிப்பை விரிவுபடுத்தும் பணிகள் தொடங்கின. வயது வந்தோருக்கான கல்வியறிவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, சஞ்சல்குடா மத்திய சிறைச்சாலை 1989-90 வரை 100% கல்வியறிவு விகிதத்தைப் பதிவுசெய்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 . "TS Prisons Department". tsprisons.gov.in. Archived from the original on 18 February 2020. பார்க்கப்பட்ட நாள் 2018-12-11.
  2. "'Richest' Gali now baths under trees at Chanchalguda". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2011-09-11 இம் மூலத்தில் இருந்து 2012-11-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121106115529/http://articles.timesofindia.indiatimes.com/2011-09-11/hyderabad/30141835_1_jail-authorities-undertrial-prisoner-prison-canteen. பார்த்த நாள்: 2018-01-16. 
  3. "Jails in Hyderabad, Cherlapalli Central Jail, Chanchalguda Jail". www.hyderabadonline.in. பார்க்கப்பட்ட நாள் 2021-07-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சல்குடா_மத்திய_சிறை&oldid=3742438" இலிருந்து மீள்விக்கப்பட்டது