சஞ்சய் இராசரத்தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சஞ்சய் ராஜரத்தினம்
Sanjay Rajaratnam
இலங்கையின் 48-வது சட்டமா அதிபர்
பதவியில் உள்ளார்
பதவியில்
26 மே 2021
நியமிப்புகோட்டாபய ராஜபக்ச
முன்னையவர்தப்புல டி லிவேரா
47-வது மன்றாடியார் நாயகம்
முன்னையவர்தில்ரிருக்சி யசு விக்கிரமசிங்க
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இலங்கைத் தமிழர்
துணைவர்மரு. தர்மினி ராஜரத்தினம்
முன்னாள் கல்லூரி
வேலைவழக்கறிஞர்,
சட்டமா அதிபர்
தொழில்சட்டத்தரணி

சஞ்சய் இராசரத்தினம் (Sanjay Rajaratnam) இலங்கை வழக்கறிஞர் ஆவார். இவர் தற்போது இலங்கையின் சட்டமா அதிபராகப் பத்வியிலுள்ளார்.[1][2][3][4][5] முன்னதாக இவர் 2019 அக்டோபர் முதல் 2021 மே வரை பதில் மன்றாடியார் நாயகமாகப் பதவி வகித்திருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சஞ்சய் இராசரத்தினம் மூத்த சட்டத்தரணி சிவா இராஜரத்தினத்தின் மகன் ஆவார். திருகோணமலையைப் பூர்வீகமாகக் கொண்ட இவரது தந்தை-வழிப் பாட்டனார் டி. இராஜரத்தினம் முடிக்குரிய வழக்கறிஞராகப் பணியாற்றியவர்.[6]

கல்வி[தொகு]

ராஜரத்தினம் தனது பாடசாலைக் கல்வியை பம்பலப்பிட்டி, புனித பீட்டர்சு கல்லூரியிலும், கொழும்பு றோயல் கல்லூரியிலும் கற்றார். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று 1987 நவம்பர் 6 இல் உயர்நீதிமன்ற வழக்கறிஞரானார். இலண்டன் குயீன் மேரி பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலைப் பட்டத்தைப் பெற்று வழக்குரைஞர் ஆனார்.[7]

சட்டப் பணி[தொகு]

1988 ஏப்பிரலில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் சேர்ந்து அரச அரச சட்டவாதியானார். பின்னர் 1998 இல் மூத்த அரச சட்டவாதியாகப் பதவி உயர்வு பெற்றார். 2005 இல் இவர் பிரதி மன்றாடியார் நாயகமாகவும், 2014 இல் மேலதிக மன்றாடியார் நாயகமாகவும், 2018 இல் மூத்த மேலதிக மன்றாடியார் நாயகமாகவும் நியமிக்கப்பட்டார்.[7][8] 2014 இல், இவர் அன்றைய அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவினால் முடிக்குரிய வழக்குரைஞராக நியமிக்கப்பட்டார்.[7] 2019 அக்டோபரில், அன்றைய மன்றாடியார் நாயகம் தில்ருக்சி டயசு விக்கிரமசிங்க அவங்கார்டு நிறுவனத் தலைவர் நிசங்க சேனாதிபதியுடன் முன்னெடுத்ததாகக் கூறப்படும் தொலைபேசி அழைப்புத் தொடர்பாக பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ராஜரத்தினம் பதில் மன்றாடியார் நாயகமாக நியமிக்கப்பட்டார்.[9][10]

2015 இல் சட்ட ஆணைக்குழு உறுப்பினராகவும், 2019 இல் கூட்டிணைக்கப்பட்ட சட்டக்கல்விப் பேரவை உறுப்பினராகவும் பணியாற்றினார். 2019 இல் இவர் சிறுவர் முறைகேடுகள் தொடர்பிலான கோப்புக்களைக் கண்காணிக்கும் பிரிவுக்கு பொறுப்பானவராகப் பணியாற்றினார். 1997 முதல் உயர்நீதிமன்றத்தில் முக்கியமான மனித உரிமை மீறல் வழக்குகளில் அரசு சார்பாக வழக்காடியுள்ளார்.[6]

சட்டமா அதிபர்[தொகு]

2021 மே 20 இல், நாடாளுமன்றப் பேரவை சஞ்சய் ராஜரத்தினத்தை சட்டமா அதிபராக நியமிக்க ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து,[11][12][13][14] 2021 மே 26 அன்று அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ச இவரை சட்டமா அதிபராக நியமித்தார்.

குடும்பம்[தொகு]

சஞ்சய் இராசரத்தினத்தின் மனைவி தர்மினி இராசரத்தினம் மருத்துராகப் பணியாற்றுகிறார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rajaratnam confirmed as new AG | Daily FT". www.ft.lk (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-05-21.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Sanjay Rajaratnam PC considered for Attorney General". Sri Lanka News - Newsfirst (in ஆங்கிலம்). 2021-05-07. பார்க்கப்பட்ட நாள் 2021-05-21.
  3. "Acting Solicitor General Sanjay Rajaratnam tipped to become next AG". www.adaderana.lk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-21.
  4. "Parliamentary Council agrees to appoint Sanjay Rajaratnam as Attorney General". The Morning - Sri Lanka News (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-05-20. பார்க்கப்பட்ட நாள் 2021-05-21.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Sanjay Rajaratnam sworn in as Sri Lanka's new Attorney General". Colombo Page. 2021-05-26. பார்க்கப்பட்ட நாள் 2021-05-29.
  6. 6.0 6.1 6.2 "சட்டமா அதிபராக நாளை பதவியேற்கும் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் இராஜரட்ணம்". வீரகேசரி. 25-05-2021. 
  7. 7.0 7.1 7.2 "In Brief". archives.sundayobserver.lk. பார்க்கப்பட்ட நாள் 2021-05-21.
  8. "SC calls for discipline at SLI". www.sundaytimes.lk. பார்க்கப்பட்ட நாள் 2021-05-21.
  9. admin (2019-10-02). "Sanjay Rajaratnam appointed acting Solicitor General". Colombo Gazette (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-21.
  10. "Sanjay Rajaratnam appointed Acting Solicitor General". The Morning - Sri Lanka News (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-10-02. Archived from the original on 2020-02-04. பார்க்கப்பட்ட நாள் 2021-05-21.
  11. "Parliament Council approves Sanjay Rajaratnam as AG". Daily News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-21.
  12. "Sanjay Rajaratnam approved as new Attorney General". www.adaderana.lk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-21.
  13. "Parliamentary Council approves Sanjay Rajaratnam as new AG". Sri Lanka News - Newsfirst (in ஆங்கிலம்). 2021-05-20. பார்க்கப்பட்ட நாள் 2021-05-21.
  14. "Parliamentary Council agrees to appoint Sanjay Rajaratnam as Attorney General". www.news.lk (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-21.
நீதித்துறை அலுவல்கள்
முன்னர்
தப்புல டி லிவேரா
இலங்கையின் சட்டமா அதிபர்
2021–
பின்னர்
நடப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சய்_இராசரத்தினம்&oldid=3631638" இலிருந்து மீள்விக்கப்பட்டது