சங்க கால நாணயங்கள் மற்றும் அளவைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்க கால நாணயங்கள் மற்றும் அளவைகள் என்பது சங்க காலத்தில் பயன்படுத்திய காசுகள் நமக்கு மிகுதியும் கிடைக்காமையால் , அவற்றின் உருவம், அளவு, எடை, உலோகம், என்பனவற்றை பற்றி அதிகம் தெரிய வாய்ப்பில்லை. ஆயினும்,அகஸ்டஸ் மற்றும் அவரை அடுத்த பேரரசர்கள் காலத்து ரோமானிய நாணயங்களை தமிழர் அறிந்தும் பயன்படுத்தியும் வந்தனர்.”வெளி நாட்டு வாணிபத்திற்கு உலோக காசுகள் பயன்பட்டன.”[1]

மிகச் சிறிய உருவில் காணம் என்பது ஒரு பொற்காசு “தகடூரெறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை அரிசிற் கிழாருக்கு நூறாயிரம் பொற்காசுகளும் சேர நாட்டு அரசுரிமையும் அளித்தார்.[2]

காசு என்று ஒரு நாணயம் இருந்தது. இது வேப்பம் பழத்தின் அளவிலும், தாமரை மொட்டின் உருவிலும் ,அமைந்தது. இக்கட்டி தங்க மணிகளைக் கோர்த்து மாலையாக மகளிர் கழுத்தில் அணிந்தனர்.[3]

ஆயிரம், நூறாயிரம் ,பத்து பத்து இலட்சம் கோடி என்றனர் பழந்தமிழர். அடியாருக்கு நல்லார் பல்லம் என்னும் சொல்லை ஆள்கின்றார்.[4]

சங்க காலத்தில் பின்னங்கள் பற்றி மக்கள் அறிந்திருந்தனர்

  • முக்கால் : 3/4
  • அரை  : 1/2
  • கால் : 1/4
  • அரைக்கால் : 1/8
  • வீசம்  : 1/16
  • காணி : 1/64
  • முந்திரி : 1/256

காணி மற்றும் முந்திரி ஆகிய இரு பின்னங்களும் நாலடியாரின் காணக்கிடைக்கின்றது. [5] .தமிழர் பூஜ்ஜியத்தை “பாழ்”என்றனர்.

நில அளவைகள்

மா, வேலி என்பவை பண்டைத் தமிழர் அரிந்த நில அளவைகள்.

  • 100 குழி : 1மா
  • 20 மா  : 1 வேலி
  • 1 குழி : 10 சதுர அடி

நிலத்தில் இருந்து வந்த தானியத்தை அம்பணத்தால் அளந்தனர்.[6] பதிற்று பத்து உரைக்காரர் அம்பணத்தை மரக்கால் என்பார் ( மரக்கால் = நான்கு பட்டணம் படி ). ஒரு உலக்கு அல்லது இரொ ஆழக்கு . ஒரு நாழி என்பது சிறிய அளவை . அதே நேரம் நாழிகை என்பது ஒரு கால அளவு.

முகத்தல் அளவை

தூணி, பதக்கு என்பவை முகத்தல் அளவை. இவைக் கொண்டு தானியங்களை அளந்தனர்.

  • 1 தூணி : 4 மரக்கால்
  • 1 பதக்கு : 2 மரக்கால்
  • 1 மரக்கால் : 1 அம்பணம்
  • 1 மரக்கால் (அ ) அம்பணம் : 32 ஆழாக்கு

சங்க தமிழர் நீட்டல் அளவை முறையும் அறிந்திருந்தனர். அவர்கள் அறிந்த மிகச் சிறு நீட்டல் அளவை ஒரு அணு.அதற்கான வாய்பாடு

நீட்டல் அளவை

  • 8 அணு : 1தேர்த்து
  • 8 தேர்த்து : 1இம்மி
  • 8 இம்மி  : 1 எள்
  • 8 எள்  : 1 நெல்
  • 8 நெல் : ஒரு பெருவிரல் ( சராசரி )
  • 28 பெருவிரல் : ஒரு முழம்

தேர்த்து என்பது ஒரு மயிரிழை. இம்மி ஒரு மிகச் சிறு தானியம் . எள் , நெல் என்பவை தானியங்கள் . முழம் என்பது இரண்டு சாண் : அணு யாவற்றிலும் மிகச் சிறு பொருள். [7]

மேற்கோள்கள்

  1. பட்டினப் பாலை -29,30
  2. அகம் :60
  3. புறம்:33
  4. சிலப்பதிகாரம் : IX 59 -94 அடியாருக்கு நல்லார் உரை
  5. நாலடியார் : 346
  6. பதிற்று பத்து : 66
  7. சிலப்பதிகாரம் அடியாருக்கு நல்லார் உரை