சங்கிலி விளையாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வேங்கை வரிப்புலி (ஒப்பீட்டுப் பார்வைக்கு)

சங்கிலி விளையாட்டு என்பது சங்கிலி போல் கை கோத்துக்கொண்டு நின்று சிறுவர் சிறுமியர் விளையாடும் விளையாட்டு ஆகும்.

சிறுவர் சிறுமியர் சேர்ந்து கைகளைக் கோத்துக்கொண்டு சங்கிலி வட்டம் அமைப்பர். வேறு இருவரும் உள்ளனர். இவர்களில் ஒருவர் வேங்கைப்புலி. மற்றொருவர் ஆடு. இலங்கையில் இதனைப் பசு என வைத்துக்கொண்டு விளையாடுவர். ஆடாக விளையாடுபவர் சங்கிலி வட்டத்துக்குள்ளேயும், வேங்கைப்புலியாக விளையாடுபவர் வெளியேயும் இருப்பார்கள். வேங்கைப்புலி ஆட்டைப் பிடிக்க வேண்டும். பிடித்துவிட்டால் அடுத்த ஆட்டம். சங்கிலி வட்டத்தில் இருப்பவர் வேங்கைப்புலியை உள்ளேயோ வெளியேயோ விடாமல் தடுப்பர். தன் வலிமையால் சங்கிலியை அறுத்துக்கொண்டுதான் நுழைந்து பிடிக்க வேண்டும். ஆனால் கைகளை உயர்த்தி ஆட்டைத் தப்பியோட விட்டுவிடுவர். ஒத்துழைக்கும் மனப்பான்மையை வளர்க்கும் திளைப்பு விளையாட்டாக இது காணப்படுகின்றது.

இலங்கை விளையாட்டில் பாடும் பாடல்

சங்கிலி புங்கிலி கதவைத் திற (வேங்கைப்புலி கேட்கும்)
நான் மாட்டேன் வேங்கைப்புலி (சங்கிலித் தொடரில் உள்ளவர் சேர்ந்திசை)
பசு நிற்குதோ?(வேங்கைப்புலி கேட்கும்)
இல்லை(சங்கிலித் தொடரில் உள்ளவர் சேர்ந்திசை)
பால்மணக்குதே...(வேங்கைப்புலி கேட்கும்)
பக்கத்து வீட்ட...(சங்கிலித் தொடரில் உள்ளவர் சேர்ந்திசை)
புல்லு போட்டு பாக்கட்டுமோ?(வேங்கைப்புலி கேட்கும்)


பாட்டு நிறைவுபெற புலி சங்கிலியை உடைத்து பசுவைப்பிடிக்க முயற்சி செய்யும்.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள் நூல்[தொகு]

  • மு. வை. அரவிந்தன், தமிழக நாட்டுப்பாடல்கள், பாரி நிலையம் வெளியீடு, சென்னை, 1977

அடிக்குறிப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கிலி_விளையாட்டு&oldid=2186914" இருந்து மீள்விக்கப்பட்டது