சங்கடகர கணபதி

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search
19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் சங்கடகர கணபதியின் உருவப்படம்.

சங்கடகர கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 32வது திருவுருவம் ஆகும். இம்மூர்த்தி இளஞ்சூரியன் போன்ற வண்ணத்துடன், இடது பாகத் தொடையில் அம்மையை உடையவர். அம்மை பசிய மேனியவளாக, நீலப் பூவை ஏந்திய இருப்பாள். வலது கையில் அங்குசம் வரதம் உடையவர். இடது கையில் பாசம், பாயசபாத்திரம் ஏந்தியவர். செந்தாமரைப் பீடத்தில் நிற்பவர். நீலநிறமான ஆடையணிந்தவர்.